கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக கட்சி வட்டாரங்களில் முனுமுனுக்கப்படுகிறது. 

கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக கட்சி வட்டாரங்களில் முனுமுனுக்கப்படுகிறது. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. தொடர் தோல்விகளால் துவண்டு போன அதிமுக தொண்டர்கள் மீண்டும் தோல்வியை சந்திக்காமல் இருக்க வேண்டுமென்றால் அதிமுக- அமமுக இணைய வேண்டும் என்றும் சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுகவிற்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அன்மையில் சசிகலா, தினகரன் எந்த நிபந்தனையும் இன்றி அதிமுகவிற்குள் கொண்டுவர வேண்டும் என்று தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி அதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளித்தனர். இதை அடுத்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சசிகலாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் குரல் எழுப்பி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சசிகலா, தென் மாவட்டங்களில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சசிகலாவை சந்தித்து பேசியதோடு சசிகலாவுடன் புகைப்படமும் எடுத்துள்ளார். இதனை கண்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியதை அடுத்து ஓ.ராஜா அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், தேனி மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வைகை கருப்புஜி, கூடலூர் நகர புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் சேதுபதி ஆகியோரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கழக உடன்பிறப்புகள் யாரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளராக இருந்த முருகேசன், கட்சியை விட்டு தூக்கப்பட்டவர். அவர், ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து சசிகலாவை சந்தித்ததற்கான விளக்கத்தை அளித்து தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் எடப்பாடிக்கு தெரியவர, அவர் கடந்த 3 தினங்களாக சேலத்தில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வந்துள்ளார். பின்னர் சேலத்திலிருந்து சென்னைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தார். 3 நாட்கள் ஆலோசனைக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அவசரமாக சென்னை வந்தது ஏன் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்றும் கட்சி வட்டாரங்களில் ஓ.பன்னீர்செல்வத்தை முருகேசன் சந்தித்த விவகாரம் குறித்து கூறினர். இதை அடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை அதாவது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியிருந்த நிலையில் அதனை கட்சியின் ஒருங்கிணைப்பாளரே மீறியதால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கடுமையான அறிவிப்பை கூற வாய்ப்புள்ளதாகவும் அல்லது அவருக்கு எச்சரிக்கை விடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.