admk one year completed in tamilnadu his patry enjoyment by ramathas

ஒராண்டைக் கவிழாமல் கடந்திருக்கிறது என்பதே அதிமுகவினர் கொண்டாட்டத்திற்கு காரணம் எனவும் மக்களின் கோபத்தையும் வெறுப்பையும் சம்பாதித்ததே அதிமுகவின் ஓராண்டு சாதனை என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் நாட்டில் அதிமுக அரசு அமைக்கப்பட்டதன் முதலாமாண்டு நிறைவு விழாவை அக்கட்சியின் ஒரு பிரிவினர் இன்று கொண்டாடுகின்றனர்.

கடந்த 5 மாதங்களில் மூன்று முதலமைச்சர்களையும், ஐந்து முதலமைச்சர் வேட்பாளர்களையும் பார்த்த இந்த அரசு, ஒராண்டைக் கவிழாமல் கடந்திருக்கிறது என்பதைத் தவிர இந்தக் கொண்டாட்டத்திற்கு வேறு காரணங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

பதவி ஏற்ற ஒராண்டு காலத்திற்குள் தமிழக மக்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு ஆளாகியிருக்கிறது.

ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடுவது, ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளியாகிவிடாமல் தடுப்பது ஆகியவற்றைத் தவிர வேறு எந்தப் பணியும் இந்த ஆட்சியில் நடைபெறவில்லை.

எடப்பாடி தலைமையிலான பினாமி ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்ப்பது மட்டும் தான் முழு நேரப்பணியாக நடைபெற்று வருகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதை விடுத்து, ஆட்சியை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் கால்களில் விழுந்து கிடப்பது அவலத்திலும், அவலமாகும்.

ஊழலில் திளைக்கும் இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

எனவே, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஊழல் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தனது அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.