ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதா வழியில் அரசியல் மிகவும் சாணக்கியத்தனத்தால் சாதுர்யமாக பிஜேபி, பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி உருவாக்கி உள்ளனர்.

ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு கொள்கைகள் உண்டு. அந்த கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். இது தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே. அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் வெற்றி மட்டுமே குறிக்கோள். அதற்காகத்தான் அதிமுக இந்த மெகா கூட்டணியை அமைத்துள்ளது. 


 
மத்திய பிஜேபி அரசு மீதும், தமிழக அரசு மீதும் மக்கள் மத்தியில் எந்த வெறுப்பும் இல்லை. மோடிக்கு மாற்றான தலைவராக இந்தியாவில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. எனவே மத்தியில் பிஜேபி அரசு தொடரவேண்டும். மாநிலத்தில் அதிமுக அரசு தொடர வேண்டும். அதற்காகவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் அதிமுக - பிஜேபி கூட்டணியை நான் எதிர்ப்பதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதில் எள்ளளவும் உண்மை இல்லை. இவ்வாறு கூறினார்.

முத்தலாக் சட்ட மசோதா என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பிஜேபி மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்தது. கெடுவான் கேடு நினைப்பான் என்பது உங்களுக்குத் தான் சரியாக இருக்கும். நீங்கள் இறைவனுக்கு எதிராக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது என பேசிய அவர் தற்போது மோடியை தாறுமாறாக புகழ்ந்து அந்தர் பல்டி அடித்துள்ளது  அதிமுகவினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.