admk mla will vote meira kumar says vijayatharani
அதிமுகவில் நிலவும் குழப்பம் காரணமாக, எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமாருக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் வாக்களிப்பார்கள் என்று காங். எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அதிமுகவில் ஓ.பி.எஸ். அணி, சசிகலா அணியென பிரிந்தது. டிடிவி தினகரனை எடப்படி தலைமையிலான அணி ஒதுக்கி வைத்ததாக அறிவித்தது.
சசிகலாவையும் கலந்தலோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி அரசு தன்னிச்சையாக செயல்படுவதாக கூறப்படுகிறது. தற்போது ஓ.பி.எஸ். அணி, சசிகலா அணி, எடப்பாடி எழனிசாமி பழனிசாமி அணியென அதிமுக பிரிந்து உள்ளது.

குடியரசு தலைவர் வேட்பாளரை பாஜக அறிவித்தது. இதற்கு, எடப்படி பழனிசாமி பாஜக குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவை தெரிவித்தார். இந்த நிலையில், டிடிவி தினகரன், தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி, அதிமுகவில் குழப்பம் நீடிப்பதால், சில எம்.எல்.ஏ.க்கள் குடியரசு தலைவர் தேர்தலில் மீரா குமாருக்கு வாக்களிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங். எம்.எல்.ஏ. விஜயதரணி, எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் மீரா குமாருக்கு மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி ஆதரவளித்தது வரவேற்கத்தக்கது என்று கூறினார். இதே போன்று, மீரா குமாருக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலரும் வாக்களிப்பார்கள் என்று விஜயதரணி தெரிவித்தார்.
