நடந்து முடிந்த விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக உறுப்பினர்களான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் இன்று முறைப்படி  சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

விக்ரவாண்டி தொகுதியில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானதை அடுத்து அந்த தொகுதி காலியானது அதேபோல் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமார் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து அந்த தொகுதிக்கான இடமும் காலியாக இருந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 21ஆம் தேதி தேர்தல் நடத்தியது இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளரான முத்தமிழ்ச் செல்வன் விக்ரவாண்டி தொகுதியிலும் ரெட்டியார்பட்டி நாராயணன் நான்குநேரி தொகுதியிலும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றனர் இதையடுத்து இன்று காலை சபாநாயகர் தனபால் அறையில் சபாநாயகர் தனபால் அவர்களுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். 

இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் துணை முதலமைச்சர் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் அதிமுகவிற்கு ஏற்கெனவே சட்டப்பேரவையில் 123 இடங்கள் இருந்த நிலையில் தற்போது விக்கிரவாண்டியில் நாங்க நெறியும் சேர்த்து கூடுதலாக இரண்டு இடங்கள் என மொத்தம் 125 இடங்களை பெற்று உள்ளது திமுகவிற்கு 100 இடங்கள் காங்கிரசுக்கு 7 இடங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருக்கு ஒரு இடமும் டிடிவி தினகரன்  ஒரு இடமும்  என 234 சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளது