ADMK MLA and ministers support TTV Dinakakaram from yesterday
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பிரமாண்ட வெற்றி பெற்றதயடுத்து அவருக்கு ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர், நேற்று மாலையிலிருந்து இதுவரை அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
நேற்று ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தியதோடு வாக்கும் எண்ணப்பட்ட ராணி மேரி கல்லூரிக்கு வந்த தினகரன் தேர்தல் வெற்றி சான்றிதழை வாங்கினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி இன்னும் இரண்டு மாதங்களில் முடிவுக்கு வரும். அந்த அணியிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இனி எங்கள் பக்கம் வருவர். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அனைத்து ஸ்லீப்பர் செல்களும் வெளியே வருவார்கள் என கூறியதை அடுத்து அதிமுக அமைச்சர் மற்றும் சட்டமன்ச்ற உறுப்பினர்களின் இந்த பேச்சால் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு எம்எல்ஏக்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். தினகரன் வீட்டுக்கு சென்ற வேலூர் எம்.பி. செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
தினகரனின் இந்த பேட்டிக்குப்பின் வேலூர் எம்.பி. செங்குட்டுவன் அவரது இல்லத்தில் சந்தித்தார். தினகரன் வீட்டுக்கு நேற்று மாலை 5 மணி அளவில் சென்ற எம்.பி. செங்குட்டுவன், ஆர்.கே.நகரில் தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில் அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அது மட்டுமல்லாது, எடப்பாடி அணியில் இருக்கும் பல எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் டிடிவி அணி பக்கம் வர இருப்பதாக நேற்று மாலை முதல் செய்திகள் வரத்தொடங்கியது.

இந்நிலையில் தினகரனுக்கு அதிமுக அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்து இதோ;
அதிமுகவை ஒன்றிணைக்க டிடிவி தினகரன் நவடிக்கை எடுக்கவேண்டும். மீண்டும் அனைவரும் ஒன்றாக பணியாற்றவேண்டும்: எம்.எல்.ஏ குணசேகரன்.
அம்மாவுக்கு இரு மகன்கள் என்றால், அதில் ஒரு மகன் தற்போது வெற்றி பெற்றுள்ளார். இது அதிமுகவின் வெற்றி. இனி இறைவன் தான் நல்ல வழியை காட்டவேண்டும்: தென்காசி எம்.எல்.ஏ செல்வமோகன் தாஸ்
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால், அன்றைய தினம் கொண்டாடப்பட வேண்டிய தினமாக இருக்கும்: அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி
டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை - எம்.எல்.ஏ கே.வி ராமலிங்கம்.
தினகரனை மக்களுக்கு பிடித்துள்ளது. அதனால் அவரை மக்கள் தேர்வு செய்துள்ளனர். தோல்வி பற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது: அமைச்சர் கே.சி கருப்பணன்.
முக்கிய தலைவர்கள் தற்போது ஒருங்கிணைந்து நல்ல முடிவை எடுக்கவேண்டிய நிலை உள்ளது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஏற்படும்: எம்.எல்.ஏ நீதிபதி
ஆர்.கே நகர் மக்கள் டிடிவி தினகரனை ஏற்றுக்கொண்டுள்ளனர். சின்னம்மா பொதுச்செயலாளராகவும், மற்றொருவர் துணை பொதுச்செயலாளராகவும் அதிமுகவில் செயல்படவேண்டும். தினகரன் பொருளாளராக செயல்படவேண்டும்: எம்.எல்.ஏ ஏ.கே போஸ்.
டிடிவி தினகரன் அரசை கலைப்பதற்கு பதிலாக அதிமுகவை பலப்படுத்த உதவ வேண்டும். இதுவும் அதிமுகவின் வெற்றி தான்: பல்லடம் எம்.எல்.ஏ நடராஜன்.
நான் கடும் குழப்பத்தில் இருக்கிறேன். இப்போதைக்கு எதையும் சொல்ல தோன்றவில்லை: எம்.எல்.ஏ மோகன்.
2ஜி விவகாரத்தில் திமுக ஊழல் செய்திருக்கிறது என்பதுதான் மக்களின் தீர்ப்பு என்றும் கூறினார். ஜெயலலிதாவின் கோட்டையான ஆர்.கே.நகரில், எப்போதுமே திமுக வெற்றி பெற முடியாது - தம்பிதுரை எம்.பி ஆனால் அதிமுக வேட்பாளரான மதுசூதன் இரண்டாம் இடத்தில்பற்றி வாய்திறக்கவில்லை இப்படி தினகரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் நிலையில் தினகரன் அடிக்கடி சொல்வதைப்போல உண்மையான ஸ்லீப்பர் செல்கள் இவர்கள் தானா என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும், ஆர்.கே.நகரில் படுதோல்வியை சந்தித்ததற்கு என்ன காரணம் என்ன தினகரன் சொன்ன அந்த ஸ்லீப்பர் செல்கள் இவர்கள் தானா என்பது குறித்து விவாதிக்க அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
