என்கவுண்டர் குறித்து கனிமொழியின் கருத்து கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி  அளித்துள்ளார். சென்னை கொட்டிவாக்கத்தில் தனியார்  மருத்துவமனை துவக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு  கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,  

தெலுங்கானா பாலியல் பாலத்கார குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது தவறு என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சொல்வது கண்டனத்துக்குரியது.கொடூர பாலியல் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததே சரி  என்றார்,  உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு , உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி தேர்தல் ஆணையம் நிச்சயமாக தேர்தல் தேதியினை விரைவில் அறிவிக்கும். ஆனால் அறிவிப்பு வெளியிடும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தோஷப்படுவதாக காட்டினாலும் அவர் தேர்தலை எதிர்கொள்ளதயாராக இல்லை. 

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் ஆனால் அவர் சிரித்துக்கொண்டே அழுது கொண்டிருக்கிறார். என  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்திய அளவில் ஒப்பிடும் போது வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருகை புரிந்து சிகிச்சை பெரும் வகையில் தரமான சிகிச்சையானது தமிழக அரசும் சுகாதாரத்துறையும் அளித்து வருகிறது என்றார்.