செப். 22ந் தேதி……………………… இரவு 10.30 மணி தலையில் இடி விழுந்தது போல் ஆனார்கள் அ.தி.மு.க.வின் தீவிரத் தொண்டர்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எதற்குமே மருத்துவமனை பக்கமே தலைகாட்டாத தங்கள் தலைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கமுடியாமல் பரிதவித்துப் போனார்கள்.

ஜெயலலிதாவால், பதவி பட்டம், பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்கள்,என இன்னாள் முன்னாள்கள் வந்து சேரும் முன்னரே புயலாய் பறந்து அப்பல்லோ வாசலில் அமர்ந்தனர்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அ.தி.மு.க. மற்றும் எம்.ஜி.ஆ.ரின் விசுவாசிகள் முற்றும் முழுவதுமாக 91 –ம் ஆண்டில் இருந்தே ஜெயலலிதாவின் அதி தீவிர விசுவாசிகளாக மாறிப் போனார்கள், அன்று முதல் இன்றுவரை ஆட்சி அதிகாரத்தை விட ஜெயலலிதாவுக்கு சக்திமிக்க பலமாக விளங்கி வருவது இந்த விசுவாசத் தொண்டர்கள் தான்.

 பெங்களூரு சிறைவாசத்தின் போதும், அப்பல்லோ சிகிச்சையின் போதும் மாதக் கணக்கில் கட்டுக் குலையாமல் கட்சியை காப்பாற்றிய பங்கு இந்த முகம் தெரியா தொண்டர்களுக்கு உண்டு.

“ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” –என்ற ஒரு சுப்பிரமணியசாமியின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஒரு சேர ஒரு லட்சம் எதிர்ப்பு கிளம்புகின்றன. சகட்டு மேனிக்கு சமூக வலைதளங்களில் டிராபிக் ராமசாமியை கழுவி ஊற்றி வாயை திறக்கமுடியாத அளவுக்கு சொற்போர் இடுகின்றனர். ஜெயல்லிதாவின் தொண்டர்கள்.

இதுபோன்ற ஜெ…வின் விசுவாசத் தொடண்டர்களால் நமக்கு ஏன் வம்பு ஏன் என்ள ரீதியில் எதிர்கருத்து தெரிவிப்போர் எல்லாம் அடக்கி வாசிக்கிறார்கள். யாருடைய கட்டளையையும் எதிர்பாராமல் தன்னிச்சையாக சூழ்நிலைக்கு ஏற்ப எதிரிகளை டீல் செய்வதில் அதி.மு.க. தொண்டர்கள் கரை கண்டவர்கள்

அதிலும் ஜெயலலிதாவுக்கு ஒன்று என்றால் விட்டுக்கொடுக்காத தொண்டர்கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகள் கிளம்பிய போதெல்லாம் உண்மை நிலை என்னவென்று தெரியாவிட்டாலும்கூட, “பாசிட்டிவ் எனர்ஜி” என்பது போல, “அவருக்கு ஒன்றும் ஆகவில்லை” விரைவில் “வீட்டுக்கு வந்துவிடுவார்” என தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பிரான்ஸ் தமிழச்சி, பாரதிய ஜனதா சுப்பிரமணியசாமி, ஆகியோரின் எதிர் கருத்துக்கும் தன்னிச்சையாக பதில் கொடுத்து வருகின்றனர். இது போன்ற நெருக்கடிகளில் எல்லாம் சமாளிக்க கட்சி நிர்வாகிகள் தான், கலந்து ஆலோசித்து பதிலடி கொடுப்பார்கள்.

ஆனால், இதுபோன்ற அடிமட்டத் தொண்டர்கள், யாரையும் கலந்து ஆலோசிக்காமல், தங்கள் தலைவி, தங்கள் கட்சி என்ள ரீதியில் தற்காப்பு வேலைகளைச் செய்து வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பட்டு வரும் நிலையில், அதை முறியடிக்கும் வகையில், அ.தி.மு.க. விசுவாசத் தொண்டர்களும், தலைமையும், டுவிட்டரில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து “பாசிட்டிவான பிரசாரம்” செய்து வருகின்றனர்.

என்னுடைய முதல்வர் நலமாக உள்ளார் (மை சி எம் இஸ் பைன்), வதந்திகள் இல்லை (நோ மோர் ரூமர்ஸ்) என்ற தலைப்பில் பிரசாரம் செய்து வருகின்ளனர்.

மேலும், அ.தி.மு.க. விசுவாசத் தொண்டர்கள் இந்த டுவிட்டர் பக்கத்தை க்ளிக் செய்து, தங்கள் புரபைல் பக்கமாகவும் மாற்றிக் கொள்ளவும் வசதிகளை செய்து கொடுத்து ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பான “பாசிடிவ் பிரசாரத்தை” தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுபோன்ற, விசுவாசத் தொண்டர்கள் தான், ஜெயலலிதாவின் உண்மையான பலம் என்றால் நம்பித்தான் வேண்டும்…