முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்  உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், எம்.பி., எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  4 தீர்மானங்கள் பின்வருமாறு...!!!

1.சசிகலா, தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றம்..
2.அதிமுகவுக்கு சொந்தமான ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர். நாளிதழை கைப்பற்றுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றம்
3.விரைவில் பொதுக்குழுவையும், செயற்குழுவையும் கூட்ட அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு..
4.சசிகலா, தினகரன் நியமனம் குறித்து தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றம்..