admk is in our hands says ops

அதிமுக முழுமையாக எங்கள் கைவசம் தான் உள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரதமர் மோடியுடன் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் நேற்று சந்தித்து பேசினார். மோடியுடனான சந்திப்புக்கு பின் பாஜவுடன் கூட்டணி அறிவிப்பை ஒத்தி வைத்தார் ஓ.பன்னீர்செல்வம். பிரதமரை சந்தித்த மறுநாளே பாஜகவுடன் கூட்டணி என ஓபிஎஸ் அறிவித்தது தமிழக அரசியலில் பாரபரப்பானது.

அதைதொடர்ந்து உஷாரான ஓபிஎஸ் 10.26 மணிக்கு மற்றொரு பதிவை வெளியிட்டார். அதில் "உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும், அரசியல் கட்சிகளுடனான கூட்டணி தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம்"

பரபரப்பான இந்த சூழலில் முன்னணி செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பிரதமர் உங்களை மட்டும் சந்தித்துவிட்டு எடப்பாடி அணியை சந்திக்க மறுப்பதாக கேள்வி எழுந்ததே என கேட்டதற்கு பதிலளித்த அவர், பிரதமர் யாரைவேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றார்.

இதனையடுத்து, உங்கள் அணியில் 12 எம்பி, 12 எம்எல்ஏக்கள்தான் உள்ளனர். ஆனால் எடப்பாடி அணியில் 35 எம்பிக்கள், 123 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்றதற்கு பதிலளித்த அவர் அதிமுக முழுமையாக எங்கள் கைவசம் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் உங்களில் நிலை என்ன என கேட்டார்கள் நாங்கள் நிர்வாகிகளை கூட்டி அறிவிப்பேன் என தெரிவித்தேன். 

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், தேர்தல் அறிவித்ததும் எங்கள் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை கேட்டு கூட்டணி பற்றிய முடிவை அறிவிப்பேன் என்றார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைப்பீர்களா என்று கேட்டதற்கு உங்களின் யுகங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. இரு அணி இணைவது குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அணிகள் இணைவிற்கு முட்டுக்கட்டைக்கு நாங்கள் காரணமல்ல என பதிலளித்தார்.