admk government will continue for 100 years

அதிமுகவை பற்றி மு.க.ஸ்டாலின் புகழ்ந்து பேசினால் ஆச்சர்யப்படலாம். அவர் எப்போதுமே அதிமுகவை குறை கூறிக் கொண்டே இருக்கிறார். அவர் பேச்சை பெரியதாக எடுத்து கொள்ள வேண்டாம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எடப்பாடி பழனிச்சாமியின் 10 நாள் ஆட்சி, நன்றாகவே நடந்து வந்துள்ளது.இந்த ஆட்சி 100 ஆண்டுகள் தொடரும். தொடர்ந்து அதிமுக மட்டுமே தமிழகத்தில் ஆட்சி நடத்தும். அதற்கான வழிவகுத்து நடத்தப்படும்.

தமிழகத்தில் அதிமுகவினரை மட்டும், பிரதமர் சந்திக்கிறார் என பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். எங்களுக்கு ஆளுங்கட்சி என்ற முறையில், மத்திய அரசு ஆதரவு தருகிறது. இதை பொறுக்க முடியாமல் சிலர் வயிற்றெரிச்சல் படுகின்றனர்.

அதிமுகவையும், பாஜகவையும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறை கூறி வருகிறார். அதை பற்றி நாம் எதுவும் பேச வேண்டியதில்லை. அவர், அதிமுகவை புகழ்ந்து பேசினால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். எனவே அவர் பேச்சை பெரியதாக எடுத்து கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.