கடந்த 2009 ஆம் ஆண்டு அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளராக இருந்து வருபவர் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி. கடந்த 200 ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, சின்னசாமியை அண்ணா தொழிற்சங்க பேரசை செயலாளராக நியமித்தார்.

கடந்த 2006-2011, 2011-2016  காலங்களில் சிங்காநல்லூர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். 2006 ல் வெற்றி பெற்ற அவர் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியில் இருந்து அவரை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். ஆனால் இதனை எதிர்த்து சின்னசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இதனிடையே அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளராக இருந்தபோது 8 கோடி ரூபாயை அவர் கையாடல் செய்துவிட்டதாக சின்னச்சாமி  மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று கோவையில் உள்ள அவரது வீட்டில் சின்னசாமி கைது செய்யப்பட்டார்.

இன்று காலை சென்னை அழைத்துவரப்பட்ட சின்னசாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். தற்போது சின்னசாமி டி.டி.வி.தினகரனின்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் செயல்பட்டு வருகிறார்.