கூட்டணியில் யார் யார்? யார் யாருக்கு எத்தனை சீட்? ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக ம.செ.க்கள் கூட்டத்தில் அவசர ஆலோசனை !
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருப்பதால் தமிழகத்தில் உள்ள இரு பெரும் அரசியல் கட்சிகள் தலைமையில் கூட்டணி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ளது.
திமுக கூட்டணியில், காங்கிரஸ்,மதிமுக,விசிக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் என தயாராக உள்ளது. ஆனால் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்று இன்னும் பங்கீடு நடக்கவில்லை. அதேபோல அதிமுகவில் பிஜேபி, தேமுதிக பாமக உள்ளிட்ட திமுக கூட்டணிக்கு இணையான பலத்தோடு மோத பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது.
அதிமுக கூட்டணியில் யார் யார் எவ்வளவு தொகுதியில் போட்டியிடப்போகிறார்கள் என்பது கூட கசிந்துள்ளது. அதில், அதிமுக - 19, பாஜக -10, தேமுதிக - 4, + 1 பாமக - 6 . எனது தெரிகிறது. பாஜக வின் 10 இடங்களில் கொங்கு ஈஸ்வரன் 1 , புதிய தமிழகம் 1 , ஏ சி சண்முகம் 1 , என் ஆர் காங்கிரஸ் 1 - இவர்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் போட்டி இட உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வியூகம் பற்றியும், கூட்டணி குறித்தும், மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கப்படும் எனத் தெரிகிறது. பகுதி மற்றும் வார்டு வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.