சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு எதிராக வரலாற்று முக்கியவத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதால் ஜெ.வின் விசுவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் மற்றும் தமிழகம் முழுவதும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் பட்டாசு வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது.
குறிப்பாக ஓபிஎஸ் அதரவாளர்கள் மற்றும் தீபா ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
சசிகலா ஆதரவாளர்களாக இருந்த எம்எல்ஏக்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
