Asianet News TamilAsianet News Tamil

நாயுடுக்கு இருக்கும் தில்லுல பாதி கூட இல்லையா? ஓ.பி.எஸ்., ஈ.பி.எசை அதிமுக விசுவாசிகள்...

பி.ஜே.பி.யின் கையிலிருக்கும் ரெய்டு ஆயுதத்தை பார்த்துதான் அ.தி.மு.க. அரசு பயந்து,  சுருண்டு நிற்கிறது! எனும் விமர்சனம் நாடு முழுக்கவே விரவி கிடக்கிறது.

ADMK carder raise question against OPS EPS
Author
Chennai, First Published Sep 9, 2018, 1:55 PM IST

பி.ஜே.பி.யின் கையிலிருக்கும் ரெய்டு ஆயுதத்தை பார்த்துதான் அ.தி.மு.க. அரசு பயந்து,  சுருண்டு நிற்கிறது! எனும் விமர்சனம் நாடு முழுக்கவே விரவி கிடக்கிறது. 

இந்நிலையில் மாநிலத்துக்கான உரிமை பிரச்னையை முன்னிறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மத்தியரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கிய சந்திரபாபு நாயுடு தடாலடி ஸ்டேட்மெண்ட் ஒன்றை விடுத்துள்ளார். மோடி அரசுக்கு எதிராக அவர் சுழட்டியிருக்கும் வார்த்தைகளை சுட்டிக்காட்டி ‘இவரும் முதல்வர்தான். நீங்களும் முதல்வர்கள்தான்! ஆனால் தன்மானத்தில் கடலளவு வித்தியாசம் இருக்குது தமிழ்நாடுக்கும் - ஆந்திராவுக்கும்’ என்று எடப்பாடியாரையும், பன்னீரையும் வம்பிக்கிழுத்திருக்கின்றனர் அவரது கட்சி நிர்வாகிகளே. 

அப்படி நாயுடு என்னதான் சொன்னார்?...”ஆந்திர மாநில பிரிவினையின் போது கொண்டுவரப்பட்ட தீர்மானங்களையும், உறுதிமொழிகளையும் நிறைவேற்றாமல் அலையவிடுகிறது மத்தியரசு. அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்பதற்காக சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை மூலமாக மிரட்டல் விடுகிறது. ஆனால் இதற்கு ஒரு காலத்திலும் பயப்படமாட்டேன். ஆட்சியும், அதிகாரமும் நிரந்தரமில்லை என்பதை பா.ஜ.க. அரசு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.” என்று போட்டுத் தாளித்திருக்கிறார். 

ஐதராபாத்தில் நடந்த தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தின் பின் நடந்த மாநாட்டில்தான் நாயுடு இப்படி நறநறத்திருக்கிறார். இந்த வரிகளை மேற்கோள்காட்டித்தான் தமிழக முதல்வர்களை அவர்களின் கட்சியினரே சீண்ட துவங்கியுள்ளனர். 

கடந்த சில நாட்களாக பி.ஜே.பி.க்கு எதிராக அ.தி.மு.க.வினுள் அதிருப்தி வெடிக்க துவங்கியிருக்கும் நிலையில், இப்படி அடுத்த மாநில முதல்வரை முன்னுதாரணமாக காட்டி தமிழக முதல்வர்களை சீண்டும் விவகாரம் எங்கே போய் நிற்குமோ தெரியவில்லை. 

Follow Us:
Download App:
  • android
  • ios