Asianet News TamilAsianet News Tamil

கொட்டும் மழையில் காத்திருந்த தொண்டர்கள்.... ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்!!!

admk cadres waited for hours
admk cadres waited for hours
Author
First Published Aug 18, 2017, 9:38 PM IST


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் இணைந்து அதிமுக இணைப்பு குறித்த தகவலை வெளியிடுவதாக தகவல் வெளியாகியது. 

அதிமுக இணைப்பு குறித்து பரபரப்பாக பேசபட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நாள் முதலே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என ஒபிஎஸ் முழக்கமிட்டு வருகிறார். 

அதனால் நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் ஜெ வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். 

இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னையில் இன்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன்  தற்போது ஆலோசனை நடத்தினார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். 
இதையடுத்து ஜெ சமாதியில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. காரணம் பிரிந்த இடத்திலேயே ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகியது. 

இன்று மாலை 7.30 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் இணைந்து அதிமுக இணைப்பு குறித்த தகவலை வெளியிடுவதாக தகவல் வெளியாகியது.

ஆனால் ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து செல்கின்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்த எம்எல்ஏக்கள் அதிமுக நிர்வாகிகளும் புறப்பட்டனர்.

மெரினா கடற்கரையில் பலத்த மழை பெய்வதால் ஒதுங்கவும் இடமில்லை. யாருக்கு என்ன பதவி என்பதை எழுத்திர கேட்கிறது பன்னீர்செல்வம் தரப்பு . இணைப்பை முறைப்படி அறிவிக்கும் முன் பதவிகளை இறுதி செய்ய வலியுறுத்தி வருகின்றனர்

Follow Us:
Download App:
  • android
  • ios