திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற தத்தைய்யகுண்டா கங்கையம்மன் கோயிலில் ஆந்திர மாநில அ.தி.மு.க கட்சியின் மாநில செயலாளர் பக்கர் தலைமையில் முதல்வர் உடல் நலம் பெற தீ சட்டி ஏந்தி வழிப்பட்டனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 30 நாட்களாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல்வர் உடல் நலம் பெற்று மீண்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்று சர்வ மதப்பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுதும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் ,ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் முதல்வர் உடல்நலம் பெற வேண்டி பூஜை ,வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திரா மாநில அதிமுக சார்பில் , திருப்பதியில் உள்ள தாத்தைய்யகுண்டா கங்கையம்மன் கோயிலில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் தீ சட்டி ஏந்தி கோயிலை வலம் வந்தும் 108 தேங்காய் உடைத்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தீபாவளிக்கு அனைவருடன் சேர்ந்து கொண்டாடும் வகையில் விரைவில் பூரண உடல் நலம் பெற்று மீண்டும் தனது பணியை தொடங்குவார் என ஆந்திர மாநில செயலாளர் பக்கர் தெரிவித்தார்.