Asianet News TamilAsianet News Tamil

ராயப்பேட்டையில் குவியும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.... தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும்?

admk cadres in royapettah party office
admk cadres-in-royapettah-party-office
Author
First Published Mar 22, 2017, 5:30 PM IST


இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பான இறுதி விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள  தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும் என்பதால் எம்.எல்.ஏ.க்கள் தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

இரட்டை இலைச்சின்னம் ஓ.பி.எஸ்.சுக்கு வழங்கப்படும் பட்சத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? சேவல் சின்னத்தில் போட்டியிடலாமா என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு பின்னர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை அலுவலகத்தில் குழுமியுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை நடத்துவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளன.

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குவிந்திருப்பதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios