MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vijay: முதல் நாளே இப்படியா.. 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. விஜய் பதவியேற்பு விழாவில் சர்ச்சை!

Vijay: முதல் நாளே இப்படியா.. 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து.. விஜய் பதவியேற்பு விழாவில் சர்ச்சை!

Vijay CM Oath Ceremony Controversy: இதேபோல் தமிழக அரசு நிகழ்ச்சி ஒன்றில் வந்தே மாதரம் பாடப்பட்டதும் இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்பு அதிமுக, திமுக ஆட்சிகளில் எந்த ஒரு அரசு நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் வந்தே மாதம் பாடப்படவில்லை.

2 Min read
Author : Rayar r
Published : May 10 2026, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
முதல்வராக பதவியேற்ற விஜய்
Image Credit : ANI

முதல்வராக பதவியேற்ற விஜய்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. தவெக ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு என இடதுசாரி கட்சிகள், விசிக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்ததால் தவெகவுக்கு பெரும்பான்மை கிட்டியது.

விஜய், 9 அமைச்சர்கள் பதவியேற்பு

இதனைத் தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். சி.ஜோசப் விஜய் என்னும் நான் என்று கூறி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விஜய் பதவியேற்கும்போது தவெக தொண்டர்களின் ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது. விஜய்யுடன் தவெகவின் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் என 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
விஜய் பதவியேற்பு விழாவில் சர்ச்சை
Image Credit : ANI

விஜய் பதவியேற்பு விழாவில் சர்ச்சை

முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அதில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது விஜய் பதவியேற்பு விழா தொடங்கும் போதும், முடிவடையும் போதும் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும்.

Related Articles

Related image1
CM Vijay: C.ஜோசப் விஜய் எனும் நான்..! இறைவன் மீது ஆணையாக.. அரங்கம் அதிர முதல்வராக பதவியேற்ற விஜய்..
Related image2
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
34
3வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து
Image Credit : Asianet News

3வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

ஆனால் விஜய் பதவியேற்பின் முதல் நாளிலேயே முதலில் வந்தே மாதரம், இரண்டாவது தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டதற்கு திமுகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தமிழக அரசு நிகழ்ச்சி ஒன்றில் வந்தே மாதரம் பாடப்பட்டதும் இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்பு அதிமுக, திமுக ஆட்சிகளில் எந்த ஒரு அரசு நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் வந்தே மாதம் பாடப்படவில்லை.

44
முதன் முறையாக வந்தே மாதரம் இசைக்கப்பட்டது
Image Credit : ANI

முதன் முறையாக வந்தே மாதரம் இசைக்கப்பட்டது

இப்போது தவெக ஆட்சியின் பதவியேற்பு விழாவிலேயே வந்தே மாதரம் திணிக்கப்பட்டது ஏன்? எனவும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நமது இந்திய நாட்டில் வந்தே மாதரம் இசைக்கப்படுவது தவறு இல்லை. ஆனால் இத்தனை நாள் தமிழகத்தில் வந்தே மாதரம் இசைக்கப்படுவது மரபு அல்ல. ஆனால் இப்போது அந்த மரபு ஏன் உடைக்கப்படுகிறது? என்பதே பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது. இது ஆளுநர் கலந்து கொள்ளும் தமிழக அரசு விழா என்பதால் இப்படி நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இனி முதல்வர் விஜய் மட்டும் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் வந்தே மாதரம் இசைக்கப்படுவது தொடருமா? மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay: C.ஜோசப் விஜய் எனும் நான்..! இறைவன் மீது ஆணையாக.. அரங்கம் அதிர முதல்வராக பதவியேற்ற விஜய்..
Recommended image2
TVK Vijay Shock: பதவியேற்கும் முன்னரே விஜய்க்கு அதிர்ச்சி! நீதிமன்றம் சென்ற திமுக முன்னாள் அமைச்சர்! இன்று விசாரணை!
Recommended image3
43 வயதில் ஜெயலலிதா.. 68 வயதில் ஸ்டாலின்.. தமிழக முதல்வர்கள் வயது பட்டியல் முழு விவரம்
Related Stories
Recommended image1
CM Vijay: C.ஜோசப் விஜய் எனும் நான்..! இறைவன் மீது ஆணையாக.. அரங்கம் அதிர முதல்வராக பதவியேற்ற விஜய்..
Recommended image2
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved