Asianet News TamilAsianet News Tamil

எவன எங்க கதற வைக்கனுமோ அவன அங்க கதறவைக்கனும்..!! இது எடப்பாடி ஸ்டைல்..!!

போட்ட பணத்தை எடுக்க முடியாமல் போய் விடுமோ என்ற கலக்கத்தில் உள்ள அவர்கள், "விஜய் கொஞ்சம் அடக்கிவாசித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று புலம்ப ஆரம்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

admk cadres gave reply actor vijay and nanguneri election result like edapadi style
Author
Chennai, First Published Oct 24, 2019, 12:08 PM IST

இடைத்தேர்தல் ரிசல்ட் ஆக இருந்தாலும் சரி,  அது பிகில் பட விவகாரமாக இருந்தாலும் சரி,  "எவன எங்க கதற வைக்கணுமோ, அவன அங்க கதற வைக்கணும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் ஸ்டைல்" என இப்போது அதிமுகவினர் மார்தட்டுகின்றனர். பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய்,  அதிமுகவை சீண்டிப்பார்க்கும் வகையில், " யாரை எங்கு வைக்கனுமோ அவரை அங்கு வைத்தால் எல்லாம் நடக்கும்" என்று பேசியதற்கு பதிலடிதான் இது என்கின்றனர் அதிமுக தொண்டர்கள். admk cadres gave reply actor vijay and nanguneri election result like edapadi style

பிகில் பட இசைவெளியீட்டு விழாவில் அதிமுகவை சீண்டிப் பார்க்கும் வகையில் விஜய் பேசியது,  அதிமுகவையும் அதன் அமைச்சர்களையும் கொந்தளிப்படையச் செய்தது.  இதில் அமைச்சர்கள் விஜய்யை வச்சிசெய்ய இறங்கியதில் ஒரு கட்டத்தில் இந்த வம்பே வேண்டாம் சாமி என்று விஜய் வெளிநாட்டுக்கு பறந்த சம்பவங்களும் அரங்கேறின. ஆனாலும்,  தங்களது படத்தை ஹிட் செய்ய  நடிகர்கள் இப்படி பரபரப்புக்காக பேசுவது வழக்கம்தான் என அப்போது அதிமுகவினர் இதை சமாளித்தனர். காரணம்,  விஜய்யை ஓவராக தாக்கினால் அது ஒருவேளை நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிரொலிக்குமோ என்பதால்தான் அப்போது நிதானமாக அடக்கி  வாசித்தனர் அமைச்சர்கள்.

 admk cadres gave reply actor vijay and nanguneri election result like edapadi style

தேர்தல் முடியட்டும் பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று காத்திருந்த நிலையில். நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்தகையோடு  விஜய்யை வச்சி செய்ய ஆரம்பித்தது அரசு, பிகிலுக்கு எந்த அளவிற்கு நெருக்கடி கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு  நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது,  ஒருபடி மேலேபோய் சென்சார் போர்டுக்கு சென்ற படத்தை  ஓரம்கட்டி வைத்தது தணிக்கை குழு, அது படக்குழுவுக்கும் விஜய்க்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதற்கெல்லாம் மேலாக இதுநாள்வரை பண்டிகை நாட்களில் திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு காட்சிகளையும்  அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது . இதில் திரையரங்கு உரிமையாளர்களும் நொந்து போயினர். பிகில் படத்தை மனதில் வைத்துதான் அரசு இந்த உத்தரவு போட்டது என திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

admk cadres gave reply actor vijay and nanguneri election result like edapadi style

இந்நிலையில், திரைப்படத்திற்கு செய்யப்பட்ட முன்பதிவு கட்டணத்தையும் உடனே திருப்பித்தர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்புக் காட்சிகள் எதுவுமே இப்படத்திற்கு இல்லை என கராராக தெரிவித்தது இதனால் பிகில் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். போட்ட பணத்தை எடுக்க முடியாமல் போய் விடுமோ என்ற கலக்கத்தில் உள்ள அவர்கள்,  "விஜய் கொஞ்சம் அடக்கிவாசித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று புலம்ப ஆரம்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. காரணம் சிறப்பு காட்சிகளில் மட்டுமே கட்டணத்தை உயர்த்தி லாபம் பார்க்க முடியும் , செலவு செய்த பணத்தைவிட கூடுதல் லாபம் பார்க்கலாம் என்பதுதான் அது, ஆனால் அரசின் இவ்உத்தரவால் அனைத்தும் தடைபட்டுள்ளது என்ற விரக்கதிதான் அதற்கு காரணம். இனி விஜய்யை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யோசிக்கும் நிலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios