முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு உடனடியாக வர வேண்டும் என அதிமுக தொண்டர்கள் அவரது தி நகர் இல்லத்தை நோக்கி படை எடுகின்றனர் 

அதிமுக பொதுசெயலாளர் ஆக சசிகலா நியமிக்க பட்டுவிட்ட நிலையிலும் அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிருப்தி இருப்பதை காண முடிகிறது

குறிப்பாக பெண்கள் மத்தியில் தொடர்ந்து அதிர்ப்தி நிலவுகிறது.புதிய தலைமை வேண்டுமென தேடிவருகிறார்கள்

இந்தநிலையில்சென்னை தியாகராய நகரில் வசிக்கும் தீபா வீட்டிற்கு சென்று அவர் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என முதல்வன் பட பாணியில் வலியுறுத்துகின்றனர் 

அதிமுக நிர்வாகிகள் சில நாட்களுக்கு முன்பு வரை சசிகலா விடம் சென்று பதவி ஏற்று கொள்ள வேண்டும் என வலியுறித்தினார்

அதே போன்று தற்போது தீபா வையும் அழைகின்றனர்    ர த்தத்தின்ரத்தங்கள் தீபாவை காண வரும் அதிமுக தொண்டர்கள் அவரின் வீட்டிற்கு வெளியே வைக்க பட்டுள்ள நோட்டு பதிவேட்டில் கையெழுத்து போடுகின்றனர்

 

அந்த வகையில் இது வரை மூன்று நாட்களில் மட்டும் மூன்று பெரிய நோட்டு புத்தகங்கள் அதிமுக தொண்டர்களின் கையெழுத்துகளால் நிரம்பியுள்ளன 

அதிமுக தொண்டர்கள் தொடர் வருகையால் திடீர் விஐபி  தெருவாகமாறியுள்ளது அப்பகுதி 

அனால் தொண்டர்கள் எதிபார்ப்பு அதிக அளவில் உள்ள நிலையில் தீபாவோ இதுவரை எந்த வொரு உறுதியான முடிவையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர் அவரது நண்பர்கள் சிலர்