Asianet News TamilAsianet News Tamil

ADMK: தேர்தல் நேரத்தில் நடந்த திகுதிகு.. அதிமுகவை கதிகலங்க வைத்த புகழேந்தி.. தேர்தல் ஆணையத்தில் பகீர் புகார்!

தேர்தலில் போட்டியிட 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்கள். ஒவ்வொருவரும் ரூ. 15 ஆயிரம் கொடுத்துள்ளார்கள். அதன்மூலம் 20 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது.

ADMK - Bangalore pugalendhi gave complaint to election commission against electon commission!
Author
Delhi, First Published Dec 1, 2021, 9:06 PM IST

அதிமுகவின் சட்ட விதிகளை திருத்தியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி.

அதிமுகவில் பல காட்சிகள் அரங்கேறும் நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என்ற விதி மாற்றப்பட்டு, இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்குப்பதிவு மூலம் தேர்வு செய்வர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அதிமுக மீது அடுக்கடுக்காக  தேர்தல் ஆணையத்தில் குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார் பெங்களூரு புகழேந்தி.ADMK - Bangalore pugalendhi gave complaint to election commission against electon commission!

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்துள்ள புகாரில்,  “ அதிமுக சட்ட விதிகளில் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து கொண்டு வந்த திருத்தங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் அதிமுகவில் ரூ.20 கோடிக்கும் மேல் பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் அளிக்காமல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதெல்லாம் விதிமீறல். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்யக்கூடிய ஆட்சி மன்ற குழு கூட்டத்தையும் கூட்டவில்லை” என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

பின்னர் டெல்லியில் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,“தேர்தலில் போட்டியிட 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்கள். ஒவ்வொருவரும் ரூ. 15 ஆயிரம் கொடுத்துள்ளார்கள். அதன்மூலம் 20 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நேர்காணல் நடத்துவோம் என்று கூறினார்கள். ஆனால், நேர்காணல் எதுவும் நடத்தவில்லை.ADMK - Bangalore pugalendhi gave complaint to election commission against electon commission!

பொதுக்கூட்டத்தை போல கூட்டி, சில மணி நேரங்களில் கூட்டத்தை முடித்துவிட்டார்கள். பின்னர் அவர்களாகவே வேட்பாளரை அறிவித்துக்கொண்டார்கள். ஆட்சிமன்ற குழு கூட்டப்பட இல்லை. அதுதான் வேட்பாளர்களை முடிவு செய்ய வேண்டும். இவை எதையும் பின்பற்றாமல், தான்தோன்றித்தனமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முடிவெடுக்கிறார்கள். எக்காரணமுமின்றி யாரை வேண்டுமானாலும் கட்சியிலிருந்து தூக்கி எறிகிறார்கள்" என்றார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios