Asianet News TamilAsianet News Tamil

அதிமுக ராஜ்யசபா... ஒதுக்கி வைக்கப்பட்ட தென்மாவட்டங்கள்...

சற்றுமுன்னர் அதிமுகவுக்கான இரு ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தென்மாவட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முனகல்கள் எழுந்துள்ளன.

admk avoids rajya saba seats to south tamilnadu
Author
Chennai, First Published Jul 6, 2019, 12:17 PM IST

சற்றுமுன்னர் அதிமுகவுக்கான இரு ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தென்மாவட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முனகல்கள் எழுந்துள்ளன.admk avoids rajya saba seats to south tamilnadu

அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களாக முகம்மது ஜான், சந்திரசேகரன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் ஒரு பதவியை கூட்டணிக்கட்சியான பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள இரு பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி சீனியர்களுக்கு பதவி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேலூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு இணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முகம்மது ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். admk avoids rajya saba seats to south tamilnadu

மாநிலங்களவைக்கு இரு உறுப்பினர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாமகவுக்கு ஒரு சீட்டை அதிமுக ஒதுக்குவது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மக்களவை தேர்தலில் தருமபுரி தொகுதியில் தோல்வியடைந்த அன்புமணி ராமதாஸ் அல்லது அவரது மனைவி சவுமியா ஆகிய இருவரில் ஒருவர் மாநிலங்களவை மூலம் நாடாளுமன்றம் செல்லக்கூடும்.

இந்த சூழ்நிலையில் ஓ.பிஎஸ்சின் செல்வாக்குள்ள பகுதிகள் என்று கருதப்படும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட ராஜ்ய சபாவில் பிரதிநிதித்துவம் தரப்படாதது கட்சியினர் மத்தியில் சிறுசிறு சலசலப்பை ஏற்படுத்த்யுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios