நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேனி பாராளுமன்ற  தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும், அதுபோல் ஆண்டிப்பட்டியில் லோகிராஜனும், பெரியகுளம் அதிமுக வேட்பாளராக மயில்வேலும் போட்டியிட்டனர். இப்படி அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் தேர்தல் களத்தில் வேலை பார்ப்பார்கள்.

 அதுபோல் தான் அதிமுக கூட்டணியில் உள்ள தேனி மாவட்ட தேமுதிகவும் கூட்டணி கட்சியான அதிமுக. வேட்பாளர்களுக்கு தேர்தல் பணியாற்றியிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதுதான் தேமுதிகவைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளராக கன்னியாபிள்ளை பட்டியைச் சேர்ந்த கார்த்திக்கும்,  மாவட்ட மகளிரணி செயலாளரான சந்திராவும் பேசிக் கொள்ளும் ஆடியோ கடந்த சில தினங்களாக வாட்ஸ் ஆப்பில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

தேனி பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆண்டிப்பட்டி பெரியகுளம் இடைத்தேர்தலில் தேர்தல் பணியை பற்றி  சந்திராவிடம் ஆண்டிப்பட்டி  கார்த்திக் கூறி புலம்பி இருக்கிறார். அதற்கு சந்திராவோ... நீ சொல்வது எல்லாமே உண்மை தான் தம்பி, களத்துல இறங்கி வேல பார்க்கிறவங்களுக்கு  என்ன முக்கியத்துவம் கொடுக்கணும்றது நமது கட்சியில் தேனி மாவட்டத்தில் மட்டும் தான் கிடையாது. மற்ற எல்லா மாவட்டத்தில அப்படி கிடையாது.  ஏன் சார் இப்படி பண்றீங்க.  ஏன் எங்களுக்கு எந்த தகவலும் கொடுப்பதில்லை என்று நீ சொன்னது மாதிரியே தான்.  தம்பி கேட்டாலே உடனே அவர்களை ஓரங்கட்டிவிடுங்கள் கிராஸ் கேள்வி கேட்கிறாங்க, 

இவங்க கட்சிக்குள்ள எந்த கட்சியிலும், எந்த பொறுப்பிலும் கிடையாது. அவங்களுக்கு வேண்டிய ஆள் எலக்ஷன் நேரத்தில வந்து சுத்தி நின்னுக்குறாங்க. அண்ணியார் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள்.  நான்  மகளிரணியில் 10 வருசமாக இருந்து எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஒரு கிராமம் போகாத இடம் பாக்கி கிடையாது.  

அந்த பதவியை நான் ஏற்றத்திலிருந்து 6 நகரம், எட்டு ஒன்றியம், 22 பேரூர் கழகத்திலும் நான் போகாத ஊர் இல்லை, கால் வைக்காத இடமில்லை. அத்தனை பகுதிக்கும் நிர்வாகிகள் போட்டு கட்சியை வளர்த்துள்ளேன். சொல்லப்போனால் லேடீஸ், பூத் கமிட்டிக்கும் போட்டு ஆதாரம் எல்லாம் இருக்கும். அப்படி இருக்கும்போது மாவட்ட செயலாளர் பீல்டு ஒர்க்கே பண்ணலைனு சொல்லி என்னையே மாற்றுவதற்கு ஏகப்பட்ட இது பண்றாரு. அண்ணியார் கொடைக்கானல் வந்தபோது எனக்கு சொல்லவில்லை. இப்ப தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பொழுதும் மாவட்ட மகளிரணியான எனக்கும் சொல்லவில்லை. 

விஜயபிரபாகரன் ஆண்டிப்பட்டிகு வந்தத சொல்லல.  இதுக்கெல்லாம் பயந்து வெளியேற முடியுமா? கூட்டணினு அறிவித்ததும் இறங்கி வேலை பார்த்தோம். ஆனால் பார்க்ககூடாதுனு சொல்லி ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்தார். நீங்க ஆண்டிப்பட்டில வேலைபார்க்ககூடாது. ஆண்டிப்பட்டி வேட்பளாருக்கு வேலை பார்க்க கூடாது. உங்களை நான் வேலை செய்ய சொன்னேனா அப்படி சொல்லி ஏகப்பட்ட பிரச்சினையெல்லாம் செய்தாரு. அதையும் மீறி நான் கூட்டணி கட்சிக்கு கட்டுப்பட்டு எந்த அளவுக்கு பீல்டு ஒர்க் பண்ணனுமோ அந்த அளவுக்கு பண்ணிக் கொடுத்தேன். இவர் சொல்றார் என்பதற்காக அண்ணியாருக்கு துரோகம் பண்ண முடியாது. கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு எந்த அளவுக்கு பீல்டு ஒர்க் பண்ணனுமோ செய்தென். இவர் சொல்றார் அப்டிங்கறதுக்காக அண்ணியாருக்கு துரோகம் பண்ண முடியாது. நம்ம பீல்டுஒர்க் தான பண்றோம். உனக்கு மட்டும் இல்லப்பா மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் எவ்வளவோ டார்ச்சர் செய்தாரு கிருஷ்ணமூர்த்தி சரியா? இப்படியாக அந்த ஆடியோ உரையாடல் தொடர்கிறது.