ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், டி.ஆர்.பி. தியாகராஜன் வரிசையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சலைவைத் தொழிலாளிகளை ‘வண்ணான்’ என்று குறிப்பிட்டதாக சமூக ஊடங்களில் அதிமுக- பாஜகவினர் விமர்சித்துவருகிறார்கள்.
 ‘நீதிபதிகள் பதவிக்கு தலித்துகள் வந்ததது திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இதனையத்து  ‘நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா’ என்று பேசியதற்காக கைது செய்யப்படுவோம் என்று எண்ணி திமுக எம்.பி. தயாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். அவரோடு சேர்ந்து மற்றொரு திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவும் முன் ஜாமீன் பெற்றார். இதற்கிடையே முடி திருத்துபவர்களை ‘அம்பட்டையன்’ என்று பேசியதற்காக திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.  தியாகராஜன் மன்னிப்பு கோரினார்.


இந்த மூன்று விவகாரங்களையும் வைத்து சமூக ஊடங்களில் திமுக சமூகநீதிக்கு எதிரான கட்சி என்றும்  தலித் விரோத கட்சி என்றும் அதிமுக-பாஜக-பாமக ஆகிய கட்சியினர் விமர்சித்துவருகிறார்கள். குறிப்பாக பாஜக மிகத் தீவிரமாக திமுகவை விமர்சித்துவருகிறது. இந்நிலையில் பாஜகவில் இணைந்த வி.பி.  துரைசாமியின் குற்றச்சாட்டுகள் குறித்து பேட்டியளித்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், “குற்றச்சாட்டுகளை மொத்தமாக சொல்வது, இது மூட்டையா கட்டி ‘வண்ணா’னுக்கு துணி போடுற கதையா இருக்கு என்று பேசியதாக மீண்டும் சலசலப்பு கிளம்பியுள்ளது. சலவை தொழிலாளிகளை வண்ணான் என்று கூறியதாக அதிமுக-பாஜகவினர் திமுகவை மீண்டும் சமூக ஊடங்களில் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.