Asianet News TamilAsianet News Tamil

அதிமுக- டி.டி.வி இணைந்தால் திமுக அவுட்... பிரபல தமிழ் டிவி கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்!

அதிமுக பிரிந்து கிடப்பதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் எனக் கூறப்பட்டாலும் அதிமுகவுடன் டி.டி.வி.தினகரன் அணி இணைந்தால் திமுக வெற்றிபெற வாய்ப்பே இல்லை என பிரபல தமிழ் தொலைக்காட்சியான தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது

admk ammk parties collaborative strength may be weakness dmk openion polls
Author
Tamil Nadu, First Published Jan 31, 2019, 5:02 PM IST

அதிமுக பிரிந்து கிடப்பதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் எனக் கூறப்பட்டாலும் அதிமுகவுடன் டி.டி.வி.தினகரன் அணி இணைந்தால் திமுக வெற்றிபெற வாய்ப்பே இல்லை என பிரபல தமிழ் தொலைக்காட்சியான தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. admk ammk parties collaborative strength may be weakness dmk openion polls

காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளில் 10 ஆயிரம் பேரிடம் தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு நடத்தியது. அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்க்கும்போது அதிமுகவும், அமமுகவும் இணையும்பட்சத்தில் அது திமுகவுக்கு பெரும் சவாலாக அமையும் என்பது தெளிவாகிறது. அமமுக தனியாக பிரிந்து சென்றாலும் அதிமுக பல்வேறு இடங்களில் உயிர்ப்போடு இருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட தங்க. தமிழ்செல்வனின் தொகுதியான ஆண்டிப்பட்டியில் இடைத்தேர்தல் நடந்தால் அமமுகவுக்கு 30% அதிமுகவுக்கு 30 சதவிகிதமும் திமுக கூட்டணிக்கு 31 சதவிகித கிடைத்துள்ளது. இங்கே அதிமுகவுடன் அமமுக இணைந்தால் 60 % கிடைக்கும் .

admk ammk parties collaborative strength may be weakness dmk openion polls
அதே போல் நாடாளுமன்றத்தில் இந்தத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு அமமுக 28% அதிமுக 29% திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 31% சதவிகிதம் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் தொகுதியில் அமமுகவுக்கு 16% அதிமுகவுக்கு 30%  திமுக காங்கிரஸ் 40% சதவிகிதம் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது. ஆக இங்கும் அமமுக -அதிமுக இணைந்தால் 46 %பெற்று திமுகவை வீழ்த்த முடியும். நாடாளுமன்றத்தேர்தலில் இங்கு அமமுகவுக்கு  16% அதிமுகவுக்கு 29% திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 42% கிடைக்கும் என கருதப்படுகிறது. அதிமுக அமமுக இணைந்தால் திமுகவை விட கூடுதலாக 4 சதவிகிதம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 

பரமக்குடி தொகுதியில் அமமுகவுக்கு 20% அதிமுக 33% திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 34 சதவிகிதமும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது அமமுக -அதிமுக சேர்ந்தால் திமுகவை விட கூடுதலாக 9 சதவிகித வாக்குகளை பெற்று அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளது. admk ammk parties collaborative strength may be weakness dmk openion polls

கருணாநிதி வெற்றிபெற்ற திருவாரூர் தொகுதியிலும் கூட அதிமுக 22%  அமமுக 27%  திமுக காங்கிரஸ் 40 சதவிகிதம் வெற்றி வாய்ப்புகளை பெற முடியும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் அதிமுக - அமமுகவுடன் இணைந்தால் திருவாரூரிலும் திமுகவை பின்னுக்குத் தள்ளி வெற்றிபெற முடியும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 20 தொகுதிகளில் எடுக்கப்பட்ட இந்த சர்வே படி அதிமுக அமமுக இணைந்தால் பல்வேறு இடங்களில் திமுக தோல்வியை தழுவும் என்பதுப் தெரிய வந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios