ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியல் சூழல் மாற தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார், உலகநாயகன் ஆகிய இருவரில் மக்களிடத்தில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்..

AZ ரிசர்ச் பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு கடந்த ஜூன் 24 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் 11,691 பேரிடம் கருத்து கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை, அவரது மனைவியிடமிருந்து அத்ஹிகமான தொண்டர்களின் பலத்தோடு அதிமுகவை கைப்பற்றினார்.   அன்று முதல் பல்வேறு இன்னல்களைக் கடந்து அதிமுகவின் மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை கூட்டினார். திமுகவிற்கு எதிராக உள்ள வாக்களர்களை தன்பக்கம் கவர்ந்தார்.

இதனையடுத்து, ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் 2010 லிருந்து 2016 வரை இருந்தவரை இமாலய வெற்றி, உள்ளாட்சி தேர்தலில் அதிகமான மாநகராட்சி மேயர் கைப்பற்றினார், கூட்டுறவு தேர்தலில் கொத்தாக வெற்றியைப் பறித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரியில் அன்புமணி கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணனைத் தவிர 37 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றியை சொல்லித் தூக்கினார்.

இதனையடுத்து, 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தனதாக்கி, மீண்டும் ஆட்சி அரியாசனத்தில் அமர்ந்த ஜெயலலிதா ஒருவருடம் ஆவதற்குள் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்குப்பின் இறந்தார்.

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டிலும், தினகரனின் இடயூராலும் கட்சி இரண்டாக உடையும் தொண்டர்களை நிர்வாகிகளை இழுக்கும் வேலை நடந்ததை அடுத்து, கட்சியில் நன்மை கருதியும், கட்சியின் சின்னத்தைக் கைப்பற்றவும் பிரிந்த ஓபிஎஸ்சுடன் மீண்டும் கைக்  கைக் கோர்த்தார் எடப்பாடி. இதனையடுத்து 1 1/2 கோடி தொண்டர்களின் பலத்தோடு  இரட்டை இலை சின்னத்தையும் போராடிப் பெற்ற நிலையில் 27 சதவிகித வாக்குகளோடு பலமாக நிற்கின்றனர்.

தென்மாவட்டங்களில் குறிப்பாக, தேனி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓபிஎஸ் பலமாக உள்ளார். இதே நிலைமைதான் எடப்பாடிக்கும் சேலம் கோவை ஈரோடு திருப்பூர் ஆகிய  கவுண்டர் சமூதாயம் அதிகம் உள்ள மாவட்டங்களில்  எடப்பாடிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.