ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., என யார் வந்தாலும் மக்களுக்கு பணம் கொடுத்துதான் ஆட்சிக்கு வர முடியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளர்.

தற்போது தமிழக அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றனர்.

இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளார். அதேபோல் சபாநாயகர் தனபாலையும் சந்தித்து எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்த உள்ளார். 

நீட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் என தமிழகத்தில் பரபரப்பான நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., என யார் வந்தாலும் மக்களுக்கு பணம் கொடுத்துதான் ஆட்சிக்கு வர முடியும் என்று தெரிவித்தார்
நேர்மையான ஆட்சியைக் கொடுக்க தேமுதிகாவால் மட்டுமே முடியும் என்றும், அதிமுகவினர், திமுகவினர் தமிழக மக்களை வஞ்சிப்பதாகவும் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.