குற்றசாட்டுகளுக்கு ஆளாகும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்து விடுவது திமுகவின் வாடிக்கை. ஆனால், ஓசி பிரியாணி விவகாரத்திற்கு பிறகு நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றிற்கு நவடிக்கை எடுத்து வந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், கட்டிங் வாங்கியவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது நிர்வாகிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.  

 

சென்னை, நுங்கம்பாக்கம் பகுதிகளில், சாலை போடும் பணி நடந்தபோது கான்ட்ராக்டரிடம், 'கட்டிங்' கேட்டு தகராறு செய்த, ஆயிரம் விளக்கு பகுதி  தி.மு.க., நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு ஜாமினில் வெளிவந்த அவர் அந்த நிர்வாகியின் கட்சிப் பதவியை பறிக்க, மாவட்டச் செயலாளர்   ஜெ.அன்பழகன் கட்சித் தலைமைக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால், அவரது பதவியை பறிக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் இருக்கும் சிலரே முட்டுக்கட்டை போட்டுவிட்டனர். இதனால் அந்த நிர்வாகியின் பதவி பறிபோகவில்லை.

ஏற்கனவே, பிரியாணி கடைக்காரர்களை தாக்கிய பாக்ஸர், பியூட்டி பார்லர் பெண்ணை தாக்கிய தி.மு.க., நிர்வாகிகள் மீது எடுத்தார்கள். அப்போது மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளை கடுமையாக எதிர்த்தார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். ஆனால், ஆயிரம் விளக்கு பகுதி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை மட்டும் காப்பாத்தியதால் மற்ற நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.