Asianet News TamilAsianet News Tamil

AIADMK:மிரட்டி கைப்பற்ற அதிமுக புறம்போக்கு நிலமல்ல.. எகத்தாளம் செய்யும் எலிகளே..சசியை மறைமுக தாக்கும் விந்தியா

சில எலிகள் புலிகள் வேஷமிட்டு எகத்தாளம் செய்கின்றது. மிரட்டி கைப்பற்ற அதிமுக புறம்போக்கு நிலமல்ல இது புரட்சித்தலைவர் உருவாக்கிய புரட்சிதலைவி தன் உயிரை உரமாக்கிய சொத்து இது எங்கள் கட்சி.

actress Vindhya indirectly attacking Sasikala
Author
Tamil Nadu, First Published Dec 8, 2021, 9:27 AM IST

மிரட்டி கைப்பற்ற அதிமுக புறம்போக்கு நிலமல்ல இது புரட்சித்தலைவர் உருவாக்கிய புரட்சிதலைவி தன் உயிரை உரமாக்கிய சொத்து என அதிமுகவை கைப்பற்ற துடிக்கும் சசிகலாவை  நடிகை விந்தியா மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வந்த சசிகலா  தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு வழிவிட்டு சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.  பின்னர், திடீரென அதிமுக தொண்டர்களிடம் பேசிய ஆடியோக்கள் சசிகலா தரப்பில் வெளியானது. மேலும் அதிமுகவை மீட்பேன் என்று கூறுவதோடு, பொதுச்செயலாளர் என்று கூறிக்கொண்டு தற்போது தீவிரமாக சுற்றுப்பயணங்களிலும், அறிக்கைகளையும் சசிகலா வெளியிட்டு வருகிறார். அதிமுகவை மீட்பது தொடர்பான சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். 

actress Vindhya indirectly attacking Sasikala

ஆனால், அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் திட்டவட்டமாக கூறிவருகின்றனர். அதிமுக கொடி மற்றும் பொதுச்செயலாளர் கூறிவரும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்கப்படும் கூறியுள்ளனர். இதற்கிடையில் சசிகலாவுக்கு ஆதரவாக பேசுபவர்களை கட்சியில் இருந்து தூக்கும் அதிரடி நடவடிக்கைகளில் ஓபிஎஸ் -இபிஎஸ் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டு சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த மூத்த அதிமுக தலைவர் அன்வர் ராஜா நீக்கம். 

actress Vindhya indirectly attacking Sasikala

இதனிடையே, ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்சியில் உட்கட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளனர். அதில் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

actress Vindhya indirectly attacking Sasikala

இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயசந்திரன் சசிகலாவின் துண்டுதலின் பெயரிலேயே வழக்கு தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பல்வேறு வகையில் அதிமுகவை மீட்பது தொடர்பாக தொந்தரவு செய்து வருகிறார். இந்நிலையில், எங்கள் கட்சி எங்கள் உரிமை எங்கள் குடும்பம் எங்களுக்கு இலையுதிர்காலமே கிடையாது. எப்போதும் வசந்தகாலம் தான் என விந்தியா கூறியுள்ளார். 

 

இதுதொடர்பாக நடிகை விந்தியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சில எலிகள் புலிகள் வேஷமிட்டு எகத்தாளம் செய்கின்றது. மிரட்டி கைப்பற்ற அதிமுக புறம்போக்கு நிலமல்ல இது புரட்சித்தலைவர் உருவாக்கிய புரட்சிதலைவி தன் உயிரை உரமாக்கிய சொத்து இது எங்கள் கட்சி எங்கள் உரிமை எங்கள் குடும்பம் எங்களுக்கு இலையுதிர்காலமே கிடையாது எப்போதும் வசந்தகாலம் தான் என விந்தியா தெரிவித்துள்ளார். இந்த பதிவு அதிமுகவை கைப்பற்ற துடிக்கும் சசிகலாவை மறைமுகமாக தாக்குவதாக உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios