நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிரச்சாரத்தில் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு இணையாக நட்சத்திர பேச்சாளர்களும் பிரசார மேடையில் ஏறி மைக் பிடித்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் முனியாண்டிக்கு ஆதரவாக தனது ரைமிங்கன பேச்சால் வாக்குகளை சேகரித்தார். 

"தி.மு.க எந்த முகத்தை வைத்து கொண்டு ஓட்டு கேட்க வருகிறார்கள் என தெரியவில்லை. ஏனேன்றால் பஞ்ச பூதமான நீர்,நெருப்பு,ஆகாயம்,காற்று,நிலம் எல்லாத்தையும் வைத்து ஊழல் செய்தார்கள். ஆனால் இதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது மக்களிடம் நீலிக்கண்ணீர் வடித்து ஓட்டு கேட்கிறார்கள். ஸ்டாலின் முன்பேல்லாம் நான் முதல்வர் ஆக போறேன்னு மேடையெல்லாம் சொல்வார் ஆனா இப்ப அப்படி சொல்வதில்லை மாறாக ராகுல் பிரதமர்னுதான் சொல்கிறார்.

ஏனேன்றால் ஸ்டாலின் கட்சியை மக்கள் ஏற்கவில்லை என்பதை புரிந்து கொண்டுதான் இப்படி பேசுகிறார். ஸ்டாலினிடம் நிறைய கேட்கணும் அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும் கெயில்,மீத்தேன்,நீட், திட்டத்தில் கையெழுத்து போட்டது தி.மு.கஉண்மையா இல்லையா? இதை ஸ்டாலின் மறுக்க முடியுமா?.

இப்படி எல்லா வகையிலும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டு இப்போது முதல்வர் பதவிக்கு ஆசைபடுகிறார். நான் சொல்கிறேன் ஸ்டாலின் 'அதுக்கெல்லாம் சரிப்படமாட்டார்'. அதற்கு உதாரணம் நிறைய இருக்கிறது. கலைஞர் இடம் கேட்டார் முதல்வர் 'நான் ஆகவா அதற்கு கலைஞரும் இல்லை பா நீ அதற்கு சரிப்பட மாட்டனு சொல்லிட்டாரு,

அடுத்து இப்ப அன்பழகன் அவரும் நீ அதுக்கு சரிப்பட மாட்டனு சொல்லிட்டாரு,கவர்னர் கிட்ட போயி சி.எம் ஆகணும் இது மைனாரிட்டி ஆட்சினு சொன்னாரு அதுக்கு கவர்னரும் இல்லப்பா நீ அதுகெல்லாம் சரிப்படமாட்டனு சொல்லிட்டாரு' இப்படி போகின்ற இடத்தில் எல்லாம் சரிப்படாத ஸ்டாலினுக்கும் அவரது தி.மு.க விற்கு வாக்களிக்காமல் அம்மாவுடைய கட்சியான அ.தி.மு.கவிற்கு வாக்களியுங்கள்" என முடித்தார்.