சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வரும் சுருதிஹாசன் இரண்டு வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார்.இந்த வீடியோக்கள்  தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7ஆம் அறிவு' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் அவர் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் இவர். மேலும் ஆங்கில இணைய தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காலங்களில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தனது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பாளர்களுடன், இசை, நடனம், சமையல், ஆர்வம் என  பல விசயங்களை பகிர்ந்துகொண்டார்.அவர், சமீபத்தில் கிக் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார் என்பதையும் இப்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
 அவர் பயிற்சி எடுக்கும் இரண்டு வீடியோக்களை பகிர்ந்துள்ள அவர் “சண்டை! சண்டை பயிற்சி எனது மைய சக்தியாக, தெளிவு மற்றும் வலிமையாக இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோகள் தற்போது வைரலாகிவருகின்றன.