சென்னை, மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீப்ரியாவுக்கும் , மதுப்பிரியருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

மயிலாப்பூர், ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ஆதரவாளர்களுடன் திறந்த ஆட்டோவில் நடிகை ஸ்ரீப்ரியா வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது குறுக்கே வந்த போதை ஆசாமி ஒருவர் ஸ்ரீப்ரியாவிடம் கை கொடுக்க முயன்றார். ஆனால் ஸ்ரீப்ரியாவோ கொரோனா… கொரோனா… அதனால் இப்ப வேணாம் என்று கூறி சாமர்த்தியமாக தவிர்க்கப்பார்த்தார்.

கைய கூட கொடுக்க மாட்டேன்றீங்க? அப்புறம் எப்படி நான் உங்களுக்கு ஓட்டு போடுவது? என உரிமைக்குரல் எழுப்பினார் அந்த போதை ஆசாமி.
என்னால் உங்களுக்கு கொரோனா வந்து விடும் என்று ஸ்ரீப்ரியா கூற, ‘உங்களுக்கு கொரோனா இருக்கா?’என்று தயக்கத்துடன் கேட்ட மதுபிரியரிடம் ஸ்ரீப்ரியா ஆமாம் என்று கூறி கைகொடுக்காமல் தவிர்த்தார்.

அத்தோடு விடாமால் பார்த்தபடி நின்ற கொண்டிருந்த மதுபிரியரிடம் இப்போது கை கொடுத்தால் நம்ம இரண்டு பேரையும் பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள் என்று பயமுறுத்த, அந்த போதை ஆசாமியோ ’சாரி மேடம் சாரி’ என்று கேட்டபடியே கையெடுத்து கும்பிட்டபடி சென்று விட்டார். அந்த போதை ஆசாமியிடம் கொரோனாவை சொல்லி தப்பி விட்ட மகிழச்சியில் அங்கிருந்து கிளம்பினார் நடிகை ஸ்ரீப்ரியா. (கொரோனா இருப்பதால் இப்போது கைகொடுக்கவும் கேட்கக்கூடாது என்பதால் தலைப்பில் கேட்கக்கூடாததையும் கேட்டு எனச் சேர்த்துள்ளோம்)