கமலும், ரஜினியும் இளம் நடிகர்களாக இருந்த காலத்தில் அவர்களின் படங்களில் கிளாமர் நெடி தூக்கலாக இருக்கும். அவர்களுடன் ஜோடி போட்ட நடிகைகளில் எந்தளவுக்கும் இறங்கி, ‘இறக்கி’ நடித்து காட்சியையும், அந்த சினிமாவையும் ஹிட்டடிக்க கை கொடுத்தவர்களில் முக்கியமான ஹீரோயின் ஸ்ரீபிரியா! என்பார்கள்.

இரு மாஸ் ஹீரோக்களுக்கும் இணையான ஜோடி போட்டு தூள் கிளப்பியவர் ஸ்ரீபிரியா. பிறகு ரிட்டயர்டாகி ஒதுங்கியவர் நெடு நாள் கழித்து, டி.வி. சீரியல்கள் வழியே முகம் காட்ட துவங்கினார். கமல்ஹாசன் கட்சி துவக்கியதும் அதில் இணைந்து ஆச்சரியமூட்டியிருக்கிறார். 

கமல் கட்சியில் இருந்து கொண்டு ஷோக்காக வலம் வருகிறார் ஸ்ரீ! என்று விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது ரஜினியை கழுவிக் கழுவி ஊற்றியிருக்கிறார் ஸ்ரீபிரியா. 

அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்? என்கிறீர்களா! அதன் ஹைலைட்ஸ் பாயிண்டுகள் இதோ...

*ஜெயலலிதா இருக்கும் போது ஏன் கமலும், ரஜினியும் அரசியலுக்கு வரவில்லை? என்று கேட்கிறார்கள். தவறு. ஜெயலலிதா இருக்கும்போதே அவரை விமர்சித்தவர் கமல். 

*கமலை விட ரஜினிக்கு அதிக மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்கிறார்கள். ரஜினி ஒரேயொரு கூட்டம் மட்டும்தான் அட்டெண்ட் செய்திருக்கிறார். அதுவும் அடுத்தவர் கொடுத்த மேடை அது. அதைவைத்துக் கொண்டெல்லாம் ரஜினியின் செல்வாக்கை உறுதியாய் சொல்லிட முடியாது. 

*ரஜினியைப் போல் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா! என்றெல்லாம் கமல் யோசிக்கவில்லை. வந்த பின்னரும் குழம்பவில்லை. 

*கம்யூனிஸம், திராவிடம் இரண்டிலிருந்தும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள கமல் தயங்கவில்லை. ஏன், வலதுசாரிகளிடமிருந்தும் கூட நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வார். 

*கருணாநிதி இல்லாத தமிழகமே எனக்குப் பிடிக்கவில்லை. அவரிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால் ஸ்டாலினால் அரசியலில் சர்வைவ் பண்ணிவிட முடியும். 

*ரஜினியையும், கமலையும் பி.ஜே.பி.தான் இயக்குகிறது என்கிறார்கள். கமலே ஒரு இயக்குநர்தான், அவரை யாரும் இயக்க தேவையில்லை. 

ஆனால் ரஜினியை பி.ஜே.பி. இயக்குகிறதா என எனக்கு தெரியாது!
- என போட்டு பொளந்திருக்கிறார் ஸ்ரீ. 

ரஜினி மீது ஸ்ரீபிரியாவுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம், வார்த்தைக்கு வார்த்தை விமர்சித்து விளாசியிருக்கிறாரே? என விசாரித்தால் ஏதோ பழைய பிரச்னை இருவருக்குள்ளும் இன்னும் தொடர்கிறது என்கிறார்கள். 

ஸ்ரீபிரியா கமல் கட்சிக்குள் இணைந்ததே, ரஜினியை கடுப்பேற்றவும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரை விளாசவும்தான்! என்று தகவல் வருகிறது. ஆனால் அதே நேரத்தில் சிலரோ, ரஜினியை அரசியல் ரீதியாக விமர்சித்தே ஆக வேண்டும் எனும் முடிவில் கடுமையாக இருக்கிறார் கமல். இதை தான் நேரடியாக செய்ய முடியாது, அதேவேளையில் பாப்புலரல்லாத நபர் மூலமாக பேசினால் எடுபடாது. அதனால்தான் ஸ்ரீபிரியாவை ரஜினிக்கு எதிராக பயன்படுத்துகிறார்! என்றும் தகவல். 
உண்மையா ஸ்ரீ ?