எம்ஜிஆர் காலத்தில் இருந்து புகழ் பெற்றவர் நடிகை லதா. எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். அவருக்குப் பின் தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசருடன் இணைந்து லதா அரசியல் ரீதியாக பணியாற்றினார். பின்னர்  லதா திருநாவுக்கரசரிடம் இருந்து விலகி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுக இரண்டாக உடைந்தபோது ஓபிஎஸ் தலைமையில் செய்லபட்டு வந்த அணிக்கு தனது ஆதரவை அளித்தார். தொடர்ந்து அவ்வப்போது நடைபெற்று வரும் கட்சி நிகழ்ச்சிகளில் லதா  கலந்து கொள்வார்.

இந்நிலையில்  கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற  விழா ஒன்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அமைச்சர்கள் ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோருடன் நடிகை லதாவும் பங்கேற்றார். அப்போது சைக்கிள் கேப்பில்  யாரோ ஒருவர் லதாவின் தோள் மேல் கை வைத்துள்ளனர். அந்த கை அமைச்சர்கள் யாருடைய கையா அல்லது வேறு யாரும் கை வைத்தார்களா ? என்று நெடிசன்கள் குழம்பி வருகின்றனர்.

 

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கையா அல்லது அது ஜெயகுமாருடையதா ? என குழம்பி வரும் நெட்டிசன்கள் ஒரு வேளை இது ஃபோட்டோ ஷாப் செய்து வெளியிடப்பட்டதா ? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.