விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற போது ஈசிஆர் முட்டுக்காட்டில் குஷ்பு கைது செய்யப்பட்டார்.

மனுதர்மத்தில் பெண்களை பற்றி இழிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்து பெண்களை திருமாவளவன் இழிவாக பேசிவிட்டதாக கடும் எதிர்ப்புகள் தெரிவித்துவருகின்றன. பாஜக தலைவர்கள் திருமாவளவனுக்கு எதிராகக் கொந்தளித்துவருகிறார்கள். இந்த விவகாரத்தில் திருமாவளாவனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.


அதன்படி தமிழகத்தில் திருமாவளவனைக் கண்டித்து இன்று போராட்டம் நடக்க உள்ளது. திருமாவளவன் எம்.பி.யாக இருக்கும் சிதம்பரம் தொகுதியிலும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற இருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த இன்று காலையில் கார் மூலம் ஈசிஆர் சாலை வழியாக சிதம்பரம் சென்ற போது போலீசார் குஷ்பூ வை கைது செய்தனர்.