தேர்தல் பிரச்சார மேடையில் கமல்ஹாசன் பேசிய  இந்து தீவிரவாதம் கருத்தை அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்ல நெட்டிசன்களும் aவளைத்து வளைத்து ஆதரவும் எதிர்த்தும் விமர்சித்து வருகின்றனர். கமலின் இந்த பேச்சானது லோக்கல் கிளை செயலாளர்கள் தொடங்கி, டெல்லி அரசியல் தலைவர்கள் வரை பற்றிக்கொண்டது.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் தனது கருத்தை அழுத்தமாக பதிவிட்டு வரும் நடிகை கஸ்தூரி, தனது பங்கிற்கு கமலின் இந்த பேச்சு அந்தர் பல்டி அடித்துள்ளார். கமல்ஹாசனின் பல சிந்தனைகளுக்கு நான் பெரிய ஆதரவு என்றாலும் கூட்டத்தைத் திருப்திப்படுத்தும் அவரது பேச்சுகளுக்கு நான் என்றும் ஆதரவு கொடுப்பது இல்லை. பிரித்தாளும் அரசியல் நாடு முழுவதும் இருந்து வரும் நிலையில்,கமலின் நேர்மறை அரசியல் புத்துணர்வாக இருந்தது. ஆனால், அவரும் பெயர்களை வைத்துப் பேசி அரசியல் செய்யும் நிலைக்கு இறங்கிவிட்டது வருத்தமாக உள்ளது.

மதரீதியாக திருப்திப்படுத்துவதோடு ஏன் நின்றுவிட்டீர்கள்? சாதி அரசியலையும் எடுத்துக்கொள்ளுங்கள். இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதியில்  இந்து தீவிரவாதம் பற்றி பேசும் கமல் அப்படியே நாதுராம் கோட்சேவை பிராமணத் தீவிரவாதி என்று பேசி மற்ற குழுக்களின் ஓட்டுக்களையும் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.

இப்படி பேசிய கஸ்தூரி சிலமணி நேரத்தில், நான் உள்பட பலர் கமலின் நேற்றைய முழு பேச்சையும் கேட்காமல் வெறும் 30 நொடி பேச்சை மட்டும் ஹைலைட் செய்து வருகின்றனர். எதிர்கால இந்தியா குறித்த அவரது திட்டங்கள் அபாரமானது. அவர்அவர் இந்துவாக இருந்தாலும், முஸ்லீமாக இருந்தாலும் எந்த மதத்தையும் ஆதரித்தும் எதிர்த்தும் பேசவில்லை என்பது அவரது முழுமையான பேச்சை பார்த்தால் புரியும் என்று கஸ்தூரி திடீரென பல்டி அடித்துள்ளார்.