இந்த வகையில் குமரி மாவட்டம் பொட்டல் குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி திடீரென கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டது மேடையில் இருந்தவர்களையும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையும் கிறங்கடிக்க வைப்பதாக இருந்தது.
தமிழகம் முழுவதும் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு கல்விநிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் பொங்கள் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் குமரி மாவட்டம் பொட்டல் குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி கல்லூரி மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் மூன்று மாணவிகள் ஒரு மிக்ஸிங் பாடலுக்கு செமையான குத்தாட்டம் போட்டனர். இதைப்பார்த்த நடிகை கஸ்தூரிக்கு திடீரென மூடு மாறியது. தொடர்ந்து அதே மேடையில் 3 மாணவிகளையும் அழைத்து அவர்களுடன் சேர்ந்து, ஒரு பாடலுக்கு சரியான குத்தாட்டம் போட்டார். நடிகர் கஸ்தூரியின் இந்த குத்தாட்டம் விழா மேடையில் அமர்ந்து இருந்தவர்களையும் நிகழ்ச்சியை காண வந்தவர்களையும் கிறங்கடித்துவிட்டது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 13, 2021, 11:05 AM IST