கொரோனா தொற்றால் நடிகை ஐஸ்வர்யா ராய், மகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாலிவுட் நடிகர் அமிதாப், அவரது மகன் அபிஷேக் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதில் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அமிதாப் பச்சனின் மருமகளான அபிஷேக் பச்சன் மனைவியான ஐஸ்வர்யா ராய்க்கும் இவரது மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், இன்று நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவும் ஒன்று. குறிப்பாக மும்பையில் அதிக மக்கள் தொகை மிக நெருக்கமாக அதிகம் வசிக்கம் வசிக்கிறார்கள். இந்த நெருக்கடியான சூழலலில் அதிகஅளவிற்கு இந்த தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்காரணமாக பாலிவுட் பிரபலங்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவது அங்குள்ள திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.