காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடை எதுவிம் விதிக்கப்பட்டால் ராணுவம் வந்தால் கூட அஞ்சமாட்டோம் என நடிகர் சத்யராஜ் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழசை, ராணுவத்துக்கு  பயப்படாத இந்த நடிகர்கள் ஐடி ரெய்டுக்கு பயப்படுவார்களா? என மிரட்டியுள்ளார்.

நேற்று சென்னையில் திரைப்பட நடிகர்கள் சார்பில் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும். மூடுங்கள் மூடுங்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள். தமிழர் உணர்வுகளை மதியுங்கள். எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம். ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம். எந்தக் கெடுபிடிக்கும் அஞ்சமாட்டோம். குரல் கொடுங்கள்.. தைரியமுள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லாவிட்டால் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள் என முழக்கம் எழுப்பினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை. ராணுவத்துக்கு பயப்படாத இந்த நடிகர்கள், வருமான வரித்துறை சோதனைக்கு பயப்படுவார்களா என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

தமிழிசையின் இந்த சர்ச்சைப் பேச்சு திரையுலகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.