Asianet News TamilAsianet News Tamil

அமமுகவுக்காக பிரச்சாரம் செய்யும் நடிகர் விஜய்சேதுபதி- சூர்யா... அசரடிக்கும் டி.டி.வி அணி!

பரிசுப்பெட்டி சின்னத்தை பிரபலப்படுத்தி வரும் அமமுகவினர் விஜய்சேதுபதி, சூர்யா தோன்றும் கிப்ட் பாக்ஸ் பாடலை பரவி அரசடித்து வருகின்றனர். 

Actor Vijaya Sethupathi - Surya is campaigning for AMMK
Author
Tamil Nadu, First Published Apr 1, 2019, 4:58 PM IST

பரிசுப்பெட்டி சின்னத்தை பிரபலப்படுத்தி வரும் அமமுகவினர் விஜய்சேதுபதி, சூர்யா தோன்றும் கிப்ட் பாக்ஸ் பாடலை பரவி அரசடித்து வருகின்றனர்.

 Actor Vijaya Sethupathi - Surya is campaigning for AMMK

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் என்ற பிரபலமில்லாத சின்னத்தை பெற்று இரட்டை இலை, உதயசூரியன் என்ற இரண்டு சின்னங்களையும் தோற்கடித்து சாதனை செய்தார் டிடிவி தினகரன். குறிப்பாக குக்கரிடம் உதயசூரியன் தனது டெபாசிட்டை இழந்தது. அந்த ராசியான குக்கர் சின்னத்தை வரும் தேர்தலிலும் பயன்படுத்த தினகரன் எடுத்த சட்டப்போராட்டம் தோல்வி அடைந்தது.Actor Vijaya Sethupathi - Surya is campaigning for AMMK
 
இந்த நிலையில் தனக்கு பொதுச்சின்னமாவது வழங்க வேண்டும் என்ற தினகரனின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட்டதால் அவருக்கு 'பரிசுப்பெட்டி' என்ற பொது சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. சின்னம் வெளியானது முதலே பரிசுபெட்டி ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வந்தது. இந்நிலையில் பல்வேறு வகைகளில் பரிசு பெட்டி சின்னத்தை புரமோஷன் செய்து வருகிறது அமமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி.

 Actor Vijaya Sethupathi - Surya is campaigning for AMMK

அந்த வகையில் ஒரு பைசா கூட செலவில்லாமல் நடிகர், நடிகைகளை வைத்து பரிசுப்பெட்டி சின்னத்தை பிரமலமாக்கி வருகிறார்கள் அவர்கள். த.செ.ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த கூட்டத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ’மாற்றம் ஒன்றே தான் மாறாதடா... கண்ணீரில் தாகங்கள் தீராதடா’’  என்கிற புரமோசன் பாடலை தங்களுக்கு சாதகமாக கையெடுத்திருக்கிறது அமமுக ஐடி விங். அந்தப்பாடலில் பரிசுப்பெட்டியை பிரபல நடிகர்கள் பிரித்து பார்த்து மகிழும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன."

இந்தப்பாடலில் விஜய்சேதுபதி, நாசர், ரம்யா நம்பீசன், ஆர்யா, சிவகுமார், சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் தோன்றுகின்றனர். இந்தப்படை சமூக வலைதளங்களில் அமமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios