ரஜினி அரசியலுக்கு வர தாயாராகிவிட்டதால் அவருடன் எங்களது சண்டை தொடங்கிவிட்டது  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயை ரஜினியுடன் ஒப்பிட்டும் அப்போது அவர்  பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய சீமான், தமிழக அரசியலில் குதிக்க நடிகர்  ரஜினிகாந்த் தயாராகிவிட்டதால் அவருடன் எங்களின் சண்டை ஆரம்பமாகிவிட்டது என்றார், சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர் ரஜினியை  நடிகர் விஜய் வீழ்த்தியது போல, வசூலில் உச்சத்தில் இருந்த திருப்பதிவெங்கடாஜலபதியை நம் காஞ்சிபுரம் அத்திவரதர் வீழ்த்தி விட்டார் என்றார்.

48 நாள் தரிசனத்திற்கு பின்னர் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட்டுள்ள நிலையல்  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ரஜினியை வெங்கடாஜலபதியுடனும், விஜய்யை அத்திவரதருடனும் ஒப்பிட்டு பேசினார்.தமிழகத்தில் நாம்தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கந்தசாமி படத்தில் வருவதுபோல ஊர் ஊராக கோயில்களைகட்டி பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி, பணம்வசூல் செய்வோம் என்றார்.

 ரஜினி அரசியலுக்கு வர தயாராகி விட்டதால் அவருக்கும் எங்களுக்கும் சண்டை தொடங்கி விட்டது எனவும், அவரை எதிர்கொள்ள நாம்தமிழர் கட்சி தயாராக இருக்கிறது எனவும் அப்போது சீமான் தெரிவித்தார். நடிகரை ரஜினி காந்தை தோற்கடித்தவர் விஜய் என்றும் சீமான் உச்சரித்த கணத்தில் கூட்டத்திலிருந்து எழுந்த கைத்தட்டல் சத்தம் விண்ணை பிளந்தது.