விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை இனி முழுக்க முழுக்க விஜயின் மனைவி சங்கீதா தான் கவனித்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை இனி முழுக்க முழுக்க விஜயின் மனைவி சங்கீதா தான் கவனித்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தந்தை என்பதற்காக இதுநாள் வரை எஸ்ஏசியை ஓரளவு அட்ஜெஸ்ட் செய்து கொண்டு மக்கள் இயக்கப் பணிகளில் அவரை விஜய் அனுமதித்து வந்தார். ஆனால் எப்போது தனது இயக்கத்தை தனக்கே தெரியாமல் அரசியல் கட்சியாக்க எஸ்ஏசி முடிவு செய்தாரோ அப்போதே இனி மக்கள் இயக்கத்தில் எஸ்ஏசிக்கு எந்த வேலையும் இல்லை என்பதை விஜய் திட்டவட்டமாக்கிவிட்டதாக சொல்கிறார்கள். விஜய் மக்கள் இயக்கத்தை வைத்து எஸ்ஏசி சில கட்சிகளுடன் அதிலும் குறிப்பாக திமுகவுடன் எஸ்ஏசி நடத்திய அரசியல் பேரம் ஏற்கனவே விஜய் கவனத்திற்கு வந்தது.

இதனை அடுத்தே தனது தந்தை எஸ்ஏசியால் விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பிற்கு வந்தவர்களை அழைத்து விஜய் பேசினார். இனி தந்தை சொல்வதை கேட்க வேண்டாம், எதுவாக இருந்தாலும் தன்னை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று விஜய் கூறினார். நீலாங்கரையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது விஜய் மக்கள் இயக்க தலைவராக உள்ள புஸ்ஸி ஆனந்திடம் தான் இனி அனைத்து பொறுப்புகளும் என்றும் விஜய் கூறிவிட்டு சென்றார். ஆனால் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து விஜயின் தந்தை எஸ்ஏசியிடம் விசுவாசத்தை காட்டியுள்ளனர்.

இதனை அடுத்து மக்கள் இயக்கத்தில் தனது தந்தையின் விசுவாசிகளை தேடித் தேடி விஜய் நீக்க ஆரம்பித்துள்ளார். இதனால் ஏற்பட்ட எரிச்சலில் தான் எஸ்ஏசி அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டதால் இனி அவருக்கும் விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லைஎன்று விஜய் முடிவெடுத்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் இனி மக்கள் இயக்க செயல்பாடுகளை கவனிக்கும் பொறுப்பை தனது மனைவி சங்கீதாவிடம் விஜய் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

தந்தையிடம் இருந்து பிரிந்து விஜய் தனிக்குடித்தனம் வந்த பிறகு விஜய்க்காக புதிய படங்களின் கதை கேட்பது, டெக்னீசியன்களை இறுதி செய்வது போன்ற பணிகளில் சங்கீதா தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதோடு மட்டும் அல்லாமல் விஜயின் வரவு செலவு கணக்குகளையும் முழுக்க முழுக்க சங்கீதாவே கவனித்து வருகிறார். இதில் எவ்வித பிரச்சனையும் வராத நிலையில் மக்கள் இயக்கப்பணிகளையும் சங்கீதாவிடம் விஜய் ஒப்படைத்துவிட்டதாக சொல்கிறார்கள். தான் சூட்டிங்கிற்கு வெளியூர் செல்லும் சமயங்களில் மக்கள் இயக்கம் தொடர்பான பிரச்சனைகளை சங்கீதாவிடம் தெரிவிக்குமாறு புஸ்ஸி ஆனந்திடம் விஜய் சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு கூட்டுக் குடும்பமாக எஸ்ஏசியின் சாலிகிராமம் வீட்டில் தான் விஜய் – சங்கீதா தம்பதியினர் இருந்தனர். ஆனால் தந்தையுடன் விஜய்க்கு தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்கள் தனிக்குடித்தனம் சென்றனர். இதன் பிறகு குடும்பத்தின் பாதி பொறுப்புகளை சங்கீதா ஏற்ற நிலையில் இனி முழுப்பொறுப்பும் அவரிடம் தான் இருக்கும் என்கிறார்கள். அதாவது இனி மனைவி சொல்லே மந்திரம் என்று விஜய் இருப்பார் என்கிறார்கள்.