நித்யானந்தா மீது வன்மத்தையும் அவதூறையும்  பரப்புபவர்கள் இந்து மதத்தின் எதிரிகள் என  நடிகரும்,  பாஜக ஆதரவாளருமான எஸ்வி சேகர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார் அது குறித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்தில் தங்கி ஆன்மீக உரை நிகழ்த்திவந்த  நித்யானந்தாமீது அடுக்கடுக்கான பாலியில் குற்றசாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. ஆசிரமத்தில் உள்ள சிஷ்யைகளை  பாலியல்  ரீதியாக துன்புருத்தினார் என அவர் மீது எழுந்த குற்றச்சாட்டையடுத்து ,  நித்யானந்தா தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில் நித்யானந்தாவை சமூக வலைதளத்தில் பலரும் பல விதங்களில் கேலியாகவும் கிண்டலாகவும் கடுமையான வார்த்தைகளாலும்  விமர்சித்து வருகின்றனர்.  அதற்கு பதில் அளிக்கும் வகையில் நித்யானந்தா ஆன்றாடம் வீடியோக்கள் மூலம் தன் தரப்பு நியாயத்தை விளக்கி வருகிறார்  . இந்நிலையில் விஷ்வ ரூபம் எடுத்து வரும் இப்பிரச்சனை குறித்து அதிரடியாக எஸ் வி சேகர் கருத்து தெரிவித்து வீடியோ ஒன்று  வெளியிட்டுள்ளார் அதில்,  

நித்யானந்தா எப்போதும் இந்து தர்மத்தை மதித்து இந்துக்களுக்கு கைலாஷ் என்கிற நாடு அமைக்கவே போராடி வருகிறார். கைலாஷா என்ற இந்து நாடு அமைந்து  நித்யானந்தா டிக்கெட் தந்து அழைத்தால் நானும் குடும்பத்துடன் கைலாஷா  செல்வேன். இது பிடிக்காத நாய்கள்.... நாதாரிகள் அவரை குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.  அதனால் தான் இந்த நாதாரிகள் குரைக்கிறார்கள்.

 

அநியாயமாக நித்யானந்தா சுவாமியை இந்த அளவிற்கு டார்ச்சர் செய்வது கூடாது.  சில  நாய்கள் என்ன வேண்டுமானாலும் எழதுவார்கள்.. அவர்களுக்கு செக்குக்கும்,  சிவ லிங்கத்திற்கும் வித்யாசம் தெரியாது.  எல்லாம் தெரிந்த ஊடகத்தினர்   நீங்கள் போய் அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டு பிடியுங்கள்.  என்னை பொருத்தவரை என் தேசமும்,  இந்து மதமும்,  சாதியும் தான் எனக்கு பெரிது. இப்படிக்கு எஸெ.வி சேகர். என அதில் அவர் தெரிவித்துள்ளார்.