கொடைக்கானலில் பொதுமுடக்கத்தை மீறி பேரிஜம் வனப் பகுதிக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள் சூரி, விமல் மற்றும் இயக்குநர்கள் குத்தாட்டம் கும்மாளம் என கொரோனா காலத்தில் ரெம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதற்காக வனத்துறை அபராதம் விதித்துள்ளது. மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த 2 வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

 கொடைக்கானலில் பொதுமுடக்கத்தை மீறி பேரிஜம் வனப் பகுதிக்கு சுற்றுலா சென்ற நடிகர்கள் சூரி, விமல் மற்றும் இயக்குநர்களுக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது. மேலும் 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக தமிழக அரசு பொதுமுடக்கம் அறிவித்து அது  அமலில் இருக்கிறது. ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்வதற்கு அரசுத்துறையிடம் இ பாஸ் பெற வேண்டும்.இபாஸ் வாங்காமல் வெளியில் சுற்றியதாக இயக்குனர் பாரதிராஜா நடிகர் ரஜினிகாந்த் மீது அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில் அடுத்ததாக நடிகர் சூரி உள்ளிட்டோர் சிக்கியிருக்கிறார்கள்.

 இந்தநிலையில் கடந்த 17 ஆம் தேதி கொடைக்கானல் வனப் பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரிப் பகுதிக்கு நடிகர்கள் விமல், சூரி மற்றும் இயக்குநர்கள் 2 பேர் உள்ளிட்ட சிலர் அனுமதி பெறாமல் சென்று தங்கியுள்ள சம்பவம் தற்போது பெரிய அளவில் விஸ்ரூபம் எடுத்துள்ளது. அங்கு அவர்கள் ஏரியில் மீன் பிடித்து சமையல் செய்தும் ஆட்டம் பாட்டம் குத்தாட்டம் என கும்மாளம் அடித்திருக்கிறார்கள். அந்த குஷியில் திரைப்படத்துறையினருடன் வனத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் புகைப்படம் எடுத்து அந்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மாட்டிக்கொண்டுள்ளனர். அரசு உத்தரவை மீறி வனப் பகுதிக்குள் சென்றவர்கள் மீதும், அவர்களுக்கு உதவி செய்த வனத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேத்துப்பாறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரன்  கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதனிடம் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து வனத்துறை ரேஞ்சர் கிருஷ்ணசாமி பேசும் போது.."கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நடிகர்கள் விமல், சூரி மற்றும் சிலர் தங்கியிருந்தற்காகவும். அனுமதியில்லாமல் பேரிஜம் ஏரிக்குச் சென்று மீன் பிடித்த காரணத்திற்காகவும் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வனப் பணியாளர்கள் சைமன் பிரபு செல்வம்  ஆகிய இருவரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்."