வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி, மற்றும் எதிர் கட்சிகளான அதிமுக, மற்றும் திமுகவுடன் கூட்டணியில்,  உள்ள கட்சிகளுக்கு கிட்டத்தட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டன.  

இந்த நிலையில்,  இரு கூட்டணியிலும் இணையாத கட்சிகள் மூன்றாவது கூட்டணியிலோ அல்லது தனித்து நிற்க வேண்டிய நிலையில் உருவாகியுள்ளது.

தற்போது பிரபல அரசியல்வாதியும், நடிகருமான சரத்குமார் 40 தொகுதிகளிலும் 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' தனித்து போட்டியிடும் என அதிரடியாக அறிவித்துள்ளார். 

சமீபத்தில் சரத்குமார், விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்ததால் இருவரும் இணைந்து கூட்டணி வைக்க வாய்ப்பு இருந்ததாக கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் விஜய்காந்த் அதிமுக, திமுக என மாறி மாறி பேசிவருவதால் சரத்குமார் தனித்து போட்டியிட முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இவரை போலவே,  டிடிவி தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.