மகாபாரதத்தில் இருப்பதோ ஒரு சகுனிதான் ஆனால் இங்கு இருப்பவர்களோ எல்லாரும்  சகுனிதான்  என்று கூறுவதற்கு பதிலாக ராமாயணத்தில் சகுனி என கூறி நடிகர் செந்தில் அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்து விட்டார். 

ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்ததில் இருந்து தனி அணியாக செயல்பட்டு வரும் டிடிவி தினகரன் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். 

மேலும் கட்சி பொறுப்பில் இருந்து எடப்பாடி ஆதரவாளர்களை நீக்கி தமது ஆதரவுகளை நியமனம் செய்து வருகிறார். 

அந்த வகையில், கடந்த சனிக்கிழமை டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திராவை விடுவித்து அந்த இடத்திற்கு டிடிவி ஆதரவாளரான நடிகர் செந்திலை நியமனம் செய்தார். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செந்தில், சசிகலாவே பொதுச்செயலாளர் என்றும், அவர் தலைமையிலேயே கட்சி இயங்குகிறது எனவும் தெரிவித்தார். 

மேலும், மற்றவர்கள் நிலை குறித்து என்னிடம் கேள்வி எழுப்பாதீர்கள் என்றும் என்னை பற்றி மட்டும் என்னிடம் கேளுங்கள் என்றும் குறிப்பிட்டார். 

மகாபாரதத்தில் இருப்பதோ ஒரு சகுனிதான் ஆனால் இங்கு இருப்பவர்களோ எல்லாரும்  சகுனிதான்  என்று கூறுவதற்கு பதிலாக ராமாயணத்தில் சகுனி என கூறி நடிகர் செந்தில் அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்து விட்டார்.