இது மட்டும் இருந்திருந்தால் நான் அப்பவே முதலமைச்சர் ஆகியிருப்பேன்...! சரத்குமார் ஆதங்கம்
தற்போது இருப்பதைப்போல் அப்போது செல்போன், வீடியோ கேமராக்கள், சமூக வலைதளங்கள் இருந்திருந்தால் நாங்கள் செய்த தொண்டிற்கு நான் அப்போதே முதலமைச்சராகி இருப்பேன் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தீபாவளி நலத்திட்ட உதவிகள்
திரைப்படத்துறையில் சிறந்த விளங்கிய நடிகர் சரத்குமார் அதிமுக தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாக திமுகவில் இணைந்தார். இதனையடுத்து ராஜ்யசபா உறுப்பினராக திமுக தலைமையால் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அந்த கட்சியில் இருந்து வெளியேறியவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக சரத்குமார் தேர்வானார். இந்தநிலையில் சென்னை திருவொற்றியூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாக நலத்திட்ட உதவிகள் மற்றும் தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசியவர், சமத்துவ மக்கள் கட்சியினர் அரசியல் மட்டுமல்லாது ஆன்மிகம் சமத்துவம் என அனைத்தும் பேசக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். தொண்டர்கள் மக்களுக்காக உழைத்தால் தலைவன் முதல்வராகவும் பிரதமராகவும் ஆகலாம் என தெரிவித்தார்.
அப்போவே முதலமைச்சர் ஆகியிருப்பேன்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் தொண்டு, சேவை உதவி செய்து கொண்டிருந்த காலங்களில் செல்போன், வீடியோ கேமரா போன்றவை இருந்திருந்தால் அன்றைக்கே நான் முதலமைச்சர் ஆகியிருப்பேன் என தெரிவித்தார். எந்த ஒரு பணபலமும் இல்லாமல் பொருளுதவியும் இல்லாமல்15 ஆண்டுகள் இந்த இயக்கம் இயங்கி வருவதே பெரிய சாதனை தான் என கூறியவர், அரசியல் பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் அல்ல; சேவை செய்வதற்கும்தான் என தெரிவித்தார். அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பதைவிட அடுத்த தலைமுறையை பற்றி சந்திப்பவன் தான் தலைவன். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் கிடைக்கும் என அறிவித்தவன் நான்" என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
இபிஎஸ்க்கு குடைச்சல் கொடுக்கும் ஓபிஎஸ்...! 5 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி