திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளுக்கு நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் வாழ்த்து தெரிவித்தார்.
திமுக இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிறந்த நாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மாற்றுக் கட்சி பிரமுகர்கள் பலரும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். திடீரென பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும் உதயநிதி ஸ்டாலின் இல்லத்துக்கு வந்து வாழ்த்து தெரிவித்துவிட்டுச் சென்றார். தொடர்ந்து திமுகவையும் உதயநிதியையும் விமர்சித்து வரும் எஸ்.வி.சேகர், வாழ்த்து தெரிவித்தது பலரது புருவங்களை உயர்த்தின.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தது பற்றி எஸ்.வி.சேகர் விளக்கம் அளித்துள்ளார். “ தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், உதயநிதி ஸ்டாலினை சந்திக்க சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். சென்ற பிறகுதான் உதயநிதிக்கு பிறந்த நாள் என்று தெரிய வந்தது. அதனால், அவரை வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தேன். அவருடைய படம் ஒன்றிலும் நடிக்கிறேன். படத்தின் நாயகனுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நண்பர்கள், யாரும் எதிரியல்ல” என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 27, 2020, 8:51 PM IST