சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், நடிகர் ரஜினிகாந்த் திடீரென சந்தித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் மகன் சவுந்தர்யாவுக்கும் தொழிலதிபர் விசாகனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, இரு தினங்களுக்கு முன் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில், நாளை அவர்களின் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மிகவும் நெருங்கிய உறவினர்கள், திரை பிரபலங்கள், முன்னிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் திருமணத்தில் கலந்து கொள்ள ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கிய நிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து சென்று ரஜினிகாந்த் இன்று காலை அழைப்பிதழ் வழங்கி, திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். முதல்வர் இல்லத்தில் இருந்து வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த் எனது மகள் திருமணத்திற்கு வருகை தரும் படி நேரில் சென்று அழைப்பு விடு்தேன். முதலமைச்சரும் நிச்சயம் கலந்து கொள்வதாக கூறியுள்ளார் என ரஜினி தகவல் தெரிவித்துள்ளார்.